Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

பொதுஜன பெரமுன முன்னாள் எம்பி உத்திகவின் நடிப்பு தீப்பிடிக்குமா?

T

The Leader Desk

ஜூன் 14, 2024 • 5:11 AM

பொதுஜன பெரமுன முன்னாள் எம்பி உத்திகவின் நடிப்பு தீப்பிடிக்குமா?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அநுராதபுரம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான நடிகர் உத்திக பிரேமரத்னவின் வாகனத்தின் மீது பொலிஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
  • பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் வாகனம் மீது 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
  • சஞ்சீவ மஹாநாம என்ற சந்தேகத்துக்குரிய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வெளிநாடு சென்றுள்ளதாகவும், பொலிஸாருக்கு தெரியப்படுத்தி உரிய அனுமதி பெற்று வெளிநாடு செல்லவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

அநுராதபுரம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான நடிகர் உத்திக பிரேமரத்னவின் வாகனத்தின் மீது பொலிஸ்  அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர்  நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவருடன் இணைந்து திட்டமிட்ட வகையில் இந்த துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் வாகனம் மீது 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
 
துப்பாக்கிச் சூட்டில் காரின்  கண்ணாடி சேதமடைந்தது, ஆனால் எம்.பி.க்கு காயம் ஏற்படவில்லை.
 
சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
 
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
 
சஞ்சீவ மஹாநாம என்ற சந்தேகத்துக்குரிய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வெளிநாடு சென்றுள்ளதாகவும், பொலிஸாருக்கு தெரியப்படுத்தி உரிய அனுமதி பெற்று வெளிநாடு செல்லவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
 
இது தொடர்பில் தனியான விசாரணை நடத்தப்படும் எனவும் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.
 
உதவிப் பொலிஸ் அத்தியட்சகரும் பாராளுமன்ற உறுப்பினரும் நன்கு நெருக்கமானவர்கள் என்பதாலேயே இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டதாகத் தோன்றுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
 
விசாரணையில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் மனைவி மற்றும் பிள்ளைகளும் வெளிநாடு சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
 
சந்தேகத நபரான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்று தனது துப்பாக்கியை ஒருவரிடம் ஒப்படைத்து பணியிடத்துக்கு அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளதாகத் தெரிவித்த திதல்துவ, இது தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.
 
உதவி பொலிஸ் அத்தியட்சகர் நேற்றைய தினம் மலேசியாவுக்கு சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
 
நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளிநாடு சென்றார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...