Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

விவசாய அமைச்சின் செயலாளராக சம்மாந்துறைச் சேர்ந்த நசீர் நியமனம்!

T

The Leader Desk

ஜூன் 12, 2024 • 8:18 AM

விவசாய அமைச்சின் செயலாளராக சம்மாந்துறைச் சேர்ந்த நசீர் நியமனம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கால்நடை உற்பத்தி மற்றும் அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, காணி நிர்வாகம், மீன்பிடி, உணவு வழங்கலும் விநியோகத்திற்குமான அமைச்சின் செயலாளராக சம்மாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த எம்.எம்.நசீர் அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
  • மேலும், பொது நிர்வாக அமைச்சு, வண ஜீவராசிகள் அமைச்சு, வட மத்திய மாகாண அமைச்சு போன்றவற்றின் மேலதிக செயலாளராகவும், கிழக்கு மாகாண பேரவையின் செயலாளர் மற்றும் கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (நிர்வாகம்) போன்ற பல பதவிகளையும் வகித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • இலங்கை நிருவாக சேவையின் விசேட தரத்தையுடைய இவர், கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (நிர்வாகம்) கடமையாற்றி வந்த நிலையில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
எழுத்து அளவு:
கால்நடை உற்பத்தி மற்றும் அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, காணி நிர்வாகம், மீன்பிடி, உணவு வழங்கலும் விநியோகத்திற்குமான அமைச்சின் செயலாளராக சம்மாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த எம்.எம்.நசீர் அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
 
இலங்கை நிருவாக சேவையின் விசேட தரத்தையுடைய இவர், கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (நிர்வாகம்) கடமையாற்றி வந்த நிலையில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
 
29 வருட இலங்கை நிருவாக சேவை அனுபவம் கொண்ட இவர், லாகுகல மற்றும் சியம்பலாண்டுவ பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளராகவும் சம்மாந்துறை, இறக்காமம், கல்முனை, பொத்துவில், அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று போன்ற பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளராகவும், அம்பாறை மாவட்ட செயலகத்தில் மாவட்ட உதவி வறுமை நிவாரண ஆணையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
 
மேலும், பொது நிர்வாக அமைச்சு, வண ஜீவராசிகள் அமைச்சு, வட மத்திய மாகாண அமைச்சு போன்றவற்றின் மேலதிக செயலாளராகவும், கிழக்கு மாகாண பேரவையின் செயலாளர் மற்றும் கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (நிர்வாகம்) போன்ற பல
 
பதவிகளையும் வகித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இதேவேளை, கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (நிர்வாகம்) முஸ்லிம் சமய கலாசார திணைக்களப் பணிப்பாளராக கடமையாற்றிய பைசல் ஆப்தீன் நியமிக்கப்பட்டு அவரும் நேற்று முன்தினம் கடமையேற்றுக்கொண்டார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

விவசாய அமைச்சின் செயலாளராக சம்மாந்துறைச் சேர்ந்த நசீர் நியமனம்! | Tamil Leader | We Lead the Nation