காலங்களில் விட்ட தவறுகளை இனியும் விட முடியாது.
நமது கைகளை பலப்படுத்த அவர்கள் தயாராகி வருவது மகிழ்ச்சியளிப்பதாக நாபீர் பெளண்டேசன் ஸ்தாபகர், பொறியியலாளர் உதுமாங்கண்டு நாபீர் தெரிவித்தார்.
The Leader Desk
ஜூன் 12, 2024 • 8:08 AM

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
காலங்களில் விட்ட தவறுகளை இனியும் விட முடியாது.
நமது கைகளை பலப்படுத்த அவர்கள் தயாராகி வருவது மகிழ்ச்சியளிப்பதாக நாபீர் பெளண்டேசன் ஸ்தாபகர், பொறியியலாளர் உதுமாங்கண்டு நாபீர் தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடும்போது,
கடந்த 30 வருட காலமாக எமது மக்களின் தேவைகளை கண்டறிந்து நிறைவு செய்வதற்கான சந்தர்ப்பம் எமக்கு கிடைத்தது. அதனால் எதிர்வரும. தேர்தல்களில் எமது நாபீர் பெளண்டேசனுக்கு அதிகாரம் வழங்கி அழகு பார்க்க மக்கள் தயாராகி வருகின்றனர்.
எமது பிரதேசம், எமது சமூகம் தொடர்ந்தும் அரசியல்வாதிகளால் ஏமாற்றப்படும் நிலை மாற்றப்பட வேண்டுமா? அதற்கு நாம் பல்வேறு திட்டங்களை முன்வைத்து களமிறங்க காத்திருக்கிறோம். அதனூடாக பல்வேறு அபிவிருத்திகளையும் உரிமைகளையும் வென்றெடுக்க முடியும் என்கிற நம்பிக்கை எமக்குண்டு.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள சம்மாந்துறை மட்டுமல்ல கிழக்கு மாகாண மக்கள் அனைவரும் பயன்பெறக்கூடிய திட்டங்களை நாம் வகுத்து வைத்திருக்கின்றோம். குறிப்பாக சம்மாந்துறை மக்கள் கடந்தகாலங்களில் விட்ட தவறுகளை இனியும் விட முடியாது. நமது கைகளை பலப்படுத்த அவர்கள் தயாராகி வருவது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...