Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

அரசியல் இருப்புக்காக சமூகங்களை பலியாக்காதீர்கள்: கலையரசனுக்கு - யஹியாகான் கூறுகிறார்!

T

The Leader Desk

ஜூன் 12, 2024 • 7:49 AM

அரசியல் இருப்புக்காக சமூகங்களை பலியாக்காதீர்கள்: கலையரசனுக்கு - யஹியாகான் கூறுகிறார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முஸ்லிம் சமுகங்களை கூறுபோட எத்தனிக்கும் கலையரசன் எம்பியின் செயற்பாடு வன்மையாக கண்டிக்கத்தக்கது என , முகாவின் பிரதிப் பொருளாளர் ஏ.சி.
  • கருணா வந்ததால்தான் - அம்பாரை மாவட்ட தமிழ் பிரதிநித்துவம் பறிபோனது என்று நொண்டிச்சாட்டைக் கூறினாலும் - கலையரசனின் இனவாதக் கருத்துக்களே அவரை தோற்கடிக்க வைத்தது என்ற உண்மையை தமிழ் மக்களே இன்று பகிரங்கமாக கூற முனைந்துள்ளனர்.
  • யஹியாகான் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

முஸ்லிம் சமுகங்களை கூறுபோட எத்தனிக்கும் கலையரசன் எம்பியின் செயற்பாடு வன்மையாக கண்டிக்கத்தக்கது என , முகாவின் பிரதிப் பொருளாளர் ஏ.சி. யஹியாகான் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் கலையரசன் எம்பியின் இனவாதக் கருத்துக்கள்  இன மோதல்களை தூண்டும் விதமாக உள்ளதாக சுட்டிக்காட்டி யஹியாகான் - அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

மக்களால் நிராகரிக்கப்பட்டு - தேசியப் பட்டியல் எனும் பின்கதவால் பாராளுமன்றம் நுழைந்துள்ள கலையரசன் -  மக்களின் வாக்குகளால் பாராளுமன்றம் நுழைய இரு சமுகங்களையும் பிரித்தாழும் கைங்கரியத்தை முன்னெடுத்து வருகிறார்.

அரசியலில் வங்குரோத்து நிலையை அடைந்துள்ள கலையரசன் எம்பி - தமிழ், முஸ்லிம் மோதலை தூண்டிவிட எடுத்த முயற்சியை - தமிழ் மக்களே முன்னின்று தகர்த்தெறிந்தமை கடந்தகால வரலாறு. அதாவது , கடந்த பாராளுமன்ற தேர்தலில் படு தோல்வியை தமிழ் மக்கள் அவருக்கு வழங்கினர்.

கருணா வந்ததால்தான் - அம்பாரை மாவட்ட தமிழ் பிரதிநித்துவம் பறிபோனது என்று நொண்டிச்சாட்டைக் கூறினாலும் - கலையரசனின் இனவாதக் கருத்துக்களே அவரை தோற்கடிக்க வைத்தது என்ற உண்மையை தமிழ் மக்களே இன்று பகிரங்கமாக கூற முனைந்துள்ளனர்.

இதேபோல்தான் , அம்பாறை மாவட்ட எம்பியாக இருந்த கோடீஸ்வரனுக்கும் ஏற்பட்டது என்பதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

தமிழ் - முஸ்லிம் சமுகம் என்றும்போல் இன்றும் இரண்டரக் கலந்து நட்புப் பாராட்டி வாழ்ந்து வருகின்றனர். இதனை குழப்பியடிப்பது இந்த கலையரசன் மற்றும் கோடீஸ்வரனைப் போன்றவர்கள்தான்.

வெளி மாவட்டங்களில் இருந்து இறக்ஙசெய்யப்படும் சில இளைஞர்களைக் கொண்டு - துவேஷத்தை விதைத்து அம்பாரை மாவட்ட தமிழ் - முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்த கலையரசன் முனைவதை தமிழ் மக்கள் அறியாமலில்லை. இதற்கான தகுந்த பாடம் அடுதத பாராளுமன்ற தேர்தலில் கிடைக்கும் என்பதை அவர் புரிந்து வேண்டும்.

எந்தவொரு விடயத்திலும் தீர்வு எட்டப்படும் போது - அது தமிழ் சமுகத்தையும் பாதிக்காத வகையில் எட்டப்பட வேண்டும் என்பதே முஸ்லிம் சமுகத்தின் எதிர்பார்ப்பும் முடிவுமாகும் என்பதை இங்கு கோடிட்டுக் காட்டி - அற்பத்தனமான அரசியலுக்காக இரு இனங்களையும் மோதவிட துடிக்கும் கைங்கரியத்தை கலையரசன் கைவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

ஏ.சி. யஹியாகான்
பிரதிப் பொருளாளர்
முஸ்லிம் காங்கிரஸ்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...