Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

போதைப்பொருள் பாவனையைக் கண்டித்த மனைவியை நண்பருடன் இணைந்து கொலை செய்த கணவன்!

T

The Leader Desk

ஜூன் 12, 2024 • 3:56 AM

போதைப்பொருள் பாவனையைக் கண்டித்த மனைவியை நண்பருடன் இணைந்து கொலை செய்த கணவன்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தலங்கம உத்யான மாவத்தையில் தற்காலிகமாக வசித்து வந்த தாருக நதிகுமாரி (31) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
  • இதனிடையே அவரது நண்பர் ஒருவரும் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டு வந்த நிலையில் அவரும் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவதால் வாக்குவாதம் வலுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
  • இந்த பெண் தனது கணவருடன் தலங்கம உத்யான மாவத்தை பகுதியில் வசித்து வந்துள்ளதுடன் கணவர் போதைப்பொருளுக்கு அடிமையாகியிருந்ததால் இருவருக்கும் இடையில் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

இடம்பெற்று சில நாட்களின் பின்னர், உயிரிழந்த பெண்ணின் கணவர் மற்றொவருடன் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று தனது மனைவி மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டதாக பொய் முறைப்பாடு செய்து பொலிஸாரை தவறாக வழிநடத்த முயன்றதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர். 

இதனையடுத்து இவர்கள் இருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
 
தலங்கம உத்யான மாவத்தையில் தற்காலிகமாக வசித்து வந்த தாருக நதிகுமாரி (31) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 
இந்த பெண் தனது கணவருடன் தலங்கம உத்யான மாவத்தை பகுதியில்  வசித்து வந்துள்ளதுடன் கணவர் போதைப்பொருளுக்கு அடிமையாகியிருந்ததால் இருவருக்கும் இடையில் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
 
இதனிடையே அவரது நண்பர் ஒருவரும் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டு வந்த நிலையில் அவரும் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவதால் வாக்குவாதம் வலுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 
இதற்கிடையில் நேற்று  முன்தினம் (10 ) மாலை தனது  கணவர் நண்பருடன் வீட்டுக்கு வந்தபோது கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது கணவரின்
நண்பரும் பெண்ணுடன் தகராறு செய்துள்ளார். 
 
பின்னர், வீட்டில் இருந்த கூரிய ஆயுதத்தை எடுத்து பெண்ணின் தலை, கழுத்து மற்றும் பல இடங்களில் தாக்கிப் பலத்த காயம் ஏற்படுத்திய பின்னர் கணவரும் நண்பரும் வீட்டின் கதவுகளை பூட்டிவிட்டு ஹிங்குராக்கொட பகுதிக்கு தப்பிச் சென்றுள்ளார்.
 
பெண் கொல்லப்பட்டதை அறிந்து அச்சமடைந்த  இருவரும் தலங்கம பொலிஸ்  குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதிப் பொலிஸ் பரிசோதகர் லக்க்ஷிதாவைச் சந்தித்து, பொய்யான முறைப்பாடு செய்துள்ளனர்.
 
பின்னர், சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் குழு, கணவர் மற்றும் அவரது நண்பரிடம் விசாரணை நடத்திய பின்னர், அவர்கள் அளித்த முரண்பாடான வாக்குமூலங்களில் சந்தேகமடைந்து இருவரையும் கைது செய்துள்ளனர்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...