Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

ஓட்டமாவடியில் பலத்த காயங்களுடன் நியாஸ் ஹாஜியார் குழுவினரால் மீட்கப்பட்ட இளைஞர்!

T

The Leader Desk

ஜூன் 11, 2024 • 1:16 PM

ஓட்டமாவடியில் பலத்த காயங்களுடன் நியாஸ் ஹாஜியார் குழுவினரால் மீட்கப்பட்ட இளைஞர்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
  • வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி பாலத்துக்கு அருகிலிருந்தே அடிகாயங்களுடன் இந்த இளைஞர் இன்று (11) மீட்கப்பட்டுள்ளார்.
  • புத்தளம் பஸ்ஸில் வந்த குறித்த இளைஞரும் இன்னுமொரு இளைஞரும் ஓட்டமாவடி - நாவலடி பகுதியில் பஸ் நிறுத்தப்பட்டிருந்த போது வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எழுத்து அளவு:

ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி பாலத்துக்கு அருகிலிருந்தே அடிகாயங்களுடன் இந்த  இளைஞர் இன்று (11) மீட்கப்பட்டுள்ளார்.

பாலத்துக்கு அருகில் இரத்தக் காயங்களுடன் இளைஞர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதாக கல்குடா அகீல் அனர்த்த அவசர சேவைப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய அதன் பணிப்பாளர் நியாஸ் ஹாஜியார் குழுவினர் இளைஞரை மீட்டு வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

IMG 20240611 183212 800 x 533 pixel

புத்தளம் பஸ்ஸில் வந்த குறித்த இளைஞரும் இன்னுமொரு இளைஞரும் ஓட்டமாவடி - நாவலடி பகுதியில் பஸ் நிறுத்தப்பட்டிருந்த போது  வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் குறித்த இளைஞர் மீது மற்றைய இளைஞர் பொல்லால் தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

பலத்த காயங்களுக்குள்ளான இளைஞர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஓட்டமாவடியில் பலத்த காயங்களுடன் நியாஸ் ஹாஜியார் குழுவினரால் மீட்கப்பட்ட இளைஞர்! | Tamil Leader | We Lead the Nation