Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

சட்ட மா அதிபரின் சேவை நீடிப்பு விவகாரம்: இரண்டாவது நாளாகவும் தீர்மானம் இல்லை!

T

The Leader Desk

ஜூன் 11, 2024 • 9:00 AM

சட்ட மா அதிபரின் சேவை நீடிப்பு விவகாரம்: இரண்டாவது நாளாகவும் தீர்மானம் இல்லை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்தினத்துக்கு ஆறு மாத கால சேவை நீடிப்பு வழங்க ஜனாதிபதியின் பரிந்துரை தொடர்பில் இரண்டாவது நாளாகவும் இறுதித் தீர்மானம் எடுக்க முடியாமல் அரசியலமைப்பு பேரவை நேற்று (10) நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
  • அவர் தனிப்பட்ட ரீதியில் இந்த சந்திப்பில் கலந்து கொண்டு மேலும் கலந்துரையாட விரும்புவதால் கூட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  • எவ்வாறாயினும், எதிர்வரும் 18ஆம் திகதி அரசியலமைப்பு பேரவை மீண்டும் கூடவுள்ளதாகவும் சட்டமா அதிபரின் சேவை நீடிப்பு தொடர்பில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படும் என எதிர்பார்ப்பதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
  • சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக்காலம் இம்மாத இறுதியில் நிறைவடையவுள்ள நிலையில், அவரது சேவையை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
எழுத்து அளவு:

சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்தினத்துக்கு  ஆறு மாத கால சேவை நீடிப்பு வழங்க ஜனாதிபதியின் பரிந்துரை தொடர்பில் இரண்டாவது நாளாகவும் இறுதித் தீர்மானம் எடுக்க முடியாமல் அரசியலமைப்பு பேரவை நேற்று (10) நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பிரேரணைக்கு அரசியலமைப்பு சபையின் அனுமதி பெறப்பட வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று அரசியலமைப்பு சபையில் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக கலந்துகொண்டார்.

அவர் தனிப்பட்ட ரீதியில் இந்த சந்திப்பில் கலந்து கொண்டு மேலும் கலந்துரையாட விரும்புவதால் கூட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், எதிர்வரும் 18ஆம் திகதி அரசியலமைப்பு பேரவை மீண்டும் கூடவுள்ளதாகவும் சட்டமா அதிபரின் சேவை நீடிப்பு தொடர்பில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படும் என எதிர்பார்ப்பதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக்காலம் இம்மாத இறுதியில் நிறைவடையவுள்ள நிலையில், அவரது சேவையை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

இலங்கையின் 48 ஆவது சட்டமா அதிபராக ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்தினம் 2021 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...