Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

நாட்டை நாசப்படுத்திய ராஜபக்‌ஷர்களை நாம் அழைக்கவில்லை! -சம்பிக்க ரணவக்க

T

The Leader Desk

ஜூன் 11, 2024 • 6:15 AM

நாட்டை நாசப்படுத்திய ராஜபக்‌ஷர்களை நாம் அழைக்கவில்லை! -சம்பிக்க ரணவக்க

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ராஜபக்க்ஷவுடன் கூட்டணி அமைக்கப் போவதாக எழுந்துள்ள வதந்திகளுக்கு ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க பதிலளித்துள்ளார்.
  • எங்கள் நிகழ்ச்சி நிரல் குறித்து கலந்துரையாட அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்தோம்.
  • நாட்டுக்குத் தேவையான கூட்டணியை உருவாக்குவதற்காக ராஜபக்ஷக்களுடன் மற்றும் நாட்டின் வங்குரோத்து நிலைக்குக் காரணமானவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார்.
எழுத்து அளவு:

ராஜபக்க்ஷவுடன் கூட்டணி அமைக்கப் போவதாக எழுந்துள்ள வதந்திகளுக்கு ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க பதிலளித்துள்ளார்.

நாட்டுக்குத் தேவையான கூட்டணியை உருவாக்குவதற்காக ராஜபக்ஷக்களுடன் மற்றும் நாட்டின் வங்குரோத்து நிலைக்குக் காரணமானவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார்.

“இந்த நாட்டை  காலியாக்க நினைக்கும் எவருடனும் நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம். ஐக்கிய குடியரசு முன்னணியில் இருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டத்தை பெப்ரவரி 14ஆம் தேதி முன்வைத்தோம்.

எங்கள் நிகழ்ச்சி நிரல் குறித்து கலந்துரையாட  அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்தோம். ஆனால் நாங்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மஹிந்த ராஜபக்க்ஷ, பசில் ராஜபக்க்ஷ, கோட்டாபய ராஜபக்க்ஷ ஆகியோரை அழைக்கவில்லை்

மக்கள் விடுதலை முன்னணியையும் நாம் அழைத்தோம். ஆனால் அவர்கள் எங்களுடன்  கலந்துரையாட  மறுத்துவிட்டனர்.

எதிர்காலத்தில் உருவாக்கப்படும் அரசியல் கூட்டணியை தலைமைத்துவ சபை கட்டுப்படுத்தும் எனவும் அதன்படி பெரும்பான்மையினரால் தீர்மானிக்கப்படும் வேட்பாளர் ஜனாதிபதி வேட்பாளராக முன்வைக்கப்படுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

"அந்த வேட்பாளர் பதவிக்கு நான் முன்மொழியப்பட்டால், நான் போட்டியிடுவேன்." என மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...