Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

கல்முனையில் தயாரிக்கப்பட்ட புற்றுநோயை ஏற்படுத்தும் மாசிச் சம்பல்!

T

The Leader Desk

ஜூன் 11, 2024 • 5:50 AM

கல்முனையில் தயாரிக்கப்பட்ட புற்றுநோயை ஏற்படுத்தும் மாசிச் சம்பல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பல்வேறு நோய்களை ஏற்படுத்தக் கூடிய வகையில் Benzoic Acid கலந்து தயாரிக்கப்பட்ட மாசிச் சம்பல் கல்முனை பிராந்திய சந்தைகளிலும் கடைகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
  • கைப்பற்றப்பட்ட மாசிச் சம்பலின் மாதிரிகளை பரிசோதனைக்காக இரசாயனப் பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டபோது அதில் Benzoic Acid அதிகமாகக் கலந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
  • இவ்வாறு தயாரிக்கப்பட்ட ஒரு தொகை மாசிச்சம்பல் அண்மையில் சம்மாந்துறை பிரதேசத்தில் கைப்பற்றப்பட்டது.
எழுத்து அளவு:

பல்வேறு நோய்களை ஏற்படுத்தக் கூடிய வகையில் Benzoic Acid கலந்து தயாரிக்கப்பட்ட மாசிச் சம்பல் கல்முனை பிராந்திய சந்தைகளிலும் கடைகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட ஒரு தொகை மாசிச்சம்பல் அண்மையில் சம்மாந்துறை பிரதேசத்தில் கைப்பற்றப்பட்டது.
 
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் பிராந்தியத்தில் உள்ள சகல உணவு கையாளும் நிறுவனங்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. 
 
இந்த வகையில் சம்மாந்துறை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சம்மாந்துறை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி உள்ளிட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் முன்னெடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையின்போதே குறித்த மாசிச்சம்பல் கைப்பற்றப்பட்டது.
 
கைப்பற்றப்பட்ட மாசிச் சம்பலின் மாதிரிகளை பரிசோதனைக்காக இரசாயனப் பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டபோது அதில் Benzoic Acid அதிகமாகக் கலந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
 
இதனையடுத்து மாசிச் சம்பலை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தண்டப்பணமும் அறவிடப்பட்டுள்ளது. 
 
குறித்த மாசிச் சம்பல் கல்முனை பிரதேசத்தில் தயாரிக்கப்படுவதாகவும்  அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் விற்பனைக்காக விநியோகிக்கப்பட்டிருப்பதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. 
 
மாசிச்சம்பல் தயாரிக்கும் நிறுவனத்தை பரிசோதிக்கவும், விற்பனைக்காக விடப்பட்டுள்ள மாசிச்சம்பலினை மீளக் கைப்பற்றுவதற்குமான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 
Benzoic Acid கிட்னி பாதிப்பு மற்றும் புற்று நோயை ஏற்படுத்தக் கூடியதுடன் மனித உடலில் பெரும் பாதிப்புக்களையும் ஏற்படுத்தக் கூடியது. 
 
எனவே இந்த மாசிச்சம்பலை உண்பதிலிருந்து தவிர்ந்துக் கொள்ளுமாறும், விழிப்பாக இருக்குமாறும்  சுகாதார தரப்பினர் பொதுமக்களைக் கேட்டுள்ளனர்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...