Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

பாலஸ்தீன குழந்தைகளுக்கு நிதி திரட்டுதல்; முழுமையான விபரம்!

T

The Leader Desk

ஜூன் 10, 2024 • 12:57 PM

பாலஸ்தீன குழந்தைகளுக்கு நிதி திரட்டுதல்; முழுமையான விபரம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பாலஸ்தீன் குழந்தைகளுக்கு உதவி செய்வதற்காக, கொழும்பு மாவட்ட மஸ்ஜித் கூட்டமைப்பு (CDMF) நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டது.
  • ரூ.27,268,592/- நிதி சேகரிப்பு!
  • CDMF உம் அதன் கீழ் இயங்கும் 12 கூட்டமைப்புகளும் இணைந்து பாலஸ்தீன் குழந்தைகளுக்காக ரூ.27,268,592/- நிதி திரட்டியுள்ளன.
  • உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சகோதர, சகோதரிகளாக பார்க்கப்படுகிறார்கள்.
எழுத்து அளவு:

பாலஸ்தீன் குழந்தைகளுக்கு உதவி செய்வதற்காக, கொழும்பு மாவட்ட மஸ்ஜித் கூட்டமைப்பு (CDMF) நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டது.

182 பள்ளிவாசல்களைக் கொண்ட CDMF கொழும்பு மக்களுக்கு சமூக, பொருளாதார உதவிகளை வழங்கி வருகிறது. இயற்கை பேரிடர்கள் ஏற்படும் போது உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதில் முன்னிற்கிறது.
 
ரூ.27,268,592/- நிதி சேகரிப்பு!
 
CDMF உம் அதன் கீழ் இயங்கும் 12 கூட்டமைப்புகளும் இணைந்து பாலஸ்தீன் குழந்தைகளுக்காக ரூ.27,268,592/- நிதி திரட்டியுள்ளன.
 
திரட்டப்பட்ட நிதி விவரங்கள்:
 
(1) தெஹிவலை- கல்கிஸை ரூ.9,012,640/-
(2) கிருலப்பன- ரூ.1,000,000/- 
(3) புறக்கோட்டை (மத்திய) - ரூ.1,325,000/-  
(4) புதுக்கடை - ரூ.1,014,337/-
(5) மருதானை- ரூ.1,246,510/-
(6) தெமட்டகொடை - ரூ.660,800/-
(7) கொலன்னாவ பிரிவு - ரூ.2,527,475/-
(8) கொழும்பு வடக்கு - ரூ.2,044,000/-  
(9) கிராண்ட்பாஸ் - ரூ.1,519,440/-
(10) கொம்பனித் தெரு - ரூ.1,100,190/-
(11) கொள்ளுப்பிட்டி - ரூ.1,260,200/-
(12) மாளிகாவத்தை - ரூ.4,000,000/- 
(13) ஏனைய நன்கொடையாளர்கள் - ரூ.558,000/- 
 
நிதியை சரியான முறையில் பயன்படுத்துவதற்கு கோரிக்கை!
 
இந்த நிதி ஐக்கிய நாடுகள் நிவாரண மற்றும் வேலைப்பாட்டு நிறுவனம் (UNWRA) போன்ற தகுந்த நிறுவனங்கள் மூலம் காசா குழந்தைகளுக்கு உதவி செய்வதற்கு பயன்படுத்தப்பட வேண்டும் என CDMF கோரிக்கை விடுத்துள்ளது. 
 
மேலும், இந்த நன்கொடைகளைக் கண்காணிப்பதற்கும் பாலஸ்தீன் மக்களின் நலனுக்காக இதனைப் பயன்படுத்துவதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு உதவி செய்யுமாறு பாலஸ்தீன் தூதரகத்தை CDMF தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி சிரேஷ்ட சட்டத்தரணி நூர்டீன் பலஸதீனுக்கான இலங்கை தூதுவரை கேட்டுக் கொண்டார்.
 
இஸ்ரேலின் தாக்குதலில் பாதிக்கப்படும் பாலஸ்தீன் மக்களின் துன்ப நிலை குறித்தும் குறிப்பாக அங்குள்ள குழந்தைகள் அனுபவிக்கும் கொடுமைகள் குறித்தும் இலங்கை முஸ்லிம்கள் கவலை கொண்டுள்ளனர்.
 
உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சகோதர, சகோதரிகளாக பார்க்கப்படுகிறார்கள். போர், வன்முறை என்பவற்றால் பாதிக்கப்படும் அப்பாவி மக்கள் மீது இயல்பாகவே இரக்கமும் கவலையும் ஏற்படும். குழந்தைகள் பாதிக்கப்படும் போது அந்த உணர்வு மேலும் அதிகரிக்கும். இதன் காரணமாகவே பாலஸ்தீன் குழந்தைகளின் நிலை குறித்து இலங்கை முஸ்லிம்கள் கவலைப்படுகிறார்கள்.
 
இஸ்ரேல் பாலஸ்தீன் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் அனியானமானவை என்று இலங்கை முஸ்லிம்கள் கருதுகிறார்கள். இந்த அநீதியை எதிர்த்து போராடுவதும், பாலஸ்தீன் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதும் அவர்களின் விருப்பமாக இருக்கிறது.
 
மேற்கூறிய காரணங்களால், பாலஸ்தீன் மக்களுக்காக குறித்த நிதி சேகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...