Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

அபிவிருத்தியில் கரிசனை கொள்ளச் செய்த அரகலய! - முஷாரப் எம்பி

T

The Leader Desk

ஜூன் 10, 2024 • 11:23 AM

அபிவிருத்தியில் கரிசனை கொள்ளச் செய்த அரகலய! - முஷாரப் எம்பி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நூருல் ஹுதா உமர் ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி போன்ற நகரங்களின் மீது வீசப்பட்ட அணுகுண்டு தாக்கங்களின் பின்னர் ஜப்பான் எவ்வாறு அபிவிருத்தியில் முன்னிலைக்கு வந்தது.
  • ஜாபீர் அவர்களும் கலந்து கொண்டனர்.
  • சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ் பாடசாலையில் மூன்று மாடிக்கட்டிடம் ஒன்றை அமைப்பதற்காக ஆரம்பகட்டமாக இரண்டு மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்து குறித்த கட்டிட வேலைகளை ஆரம்பிப்பதற்காக பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டிய பின் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எழுத்து அளவு:

நூருல் ஹுதா உமர் 

ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி போன்ற நகரங்களின் மீது வீசப்பட்ட அணுகுண்டு தாக்கங்களின் பின்னர் ஜப்பான் எவ்வாறு அபிவிருத்தியில் முன்னிலைக்கு வந்தது.

இவ்வாறே இலங்கையில் இடம்பெற்ற அரகலய போராட்டத்தின் பின்னர் அமைச்சுக்களும் நிறுவனங்களும் அபிவிருத்திகள் தொடர்பில் கரிசனை கொண்டுள்ளதாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை மற்றும் காரைதீவு உள்ளிட்ட பிரதேசங்களின் அபிவிருத்திக் குழுக்களின் தலைவருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் தெரிவித்தார்.

சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ் பாடசாலையில் மூன்று மாடிக்கட்டிடம் ஒன்றை அமைப்பதற்காக ஆரம்பகட்டமாக இரண்டு மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்து குறித்த கட்டிட வேலைகளை ஆரம்பிப்பதற்காக பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டிய பின் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜீ.எம்.எம்.எஸ் பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம். இல்யாஸ் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப்,

தான் பதவியேற்ற காலத்தில் கொரோனா என்றும் பொருளாதார நெருக்கடி என்றும் பல்வேறு தடைகள் வந்து அபிவிருத்தி விடயங்களில் கவனம் செலுத்த முடியாது போனதாகவும் தற்போது அவ்வாறான நிலை மாறி அபிவிருத்தி விடயங்களில் கவனம் செலுத்தக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் அவைகளை முன்னெடுக்க முடியுமானவரை முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

நிகழ்வில் கௌரவ அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம் அவர்களும் விஷேட அதிதியாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபீர் அவர்களும் கலந்து கொண்டனர்.

சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ஐ. சம்சுதீன், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளரும் பாடசாலையின் பழைய மாணவருமான ஏ.எம். அசாம் மெளலவி உள்ளிட்டவர்களுடன் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவின் செயலாளர் பொறியியலாளர் எம்.ஐ.எம். றியாஸ், பிரதி அதிபர்களான திருமதி குறைஷியா றாபிக், றின்ஷா பர்வின், உதவி அதிபர் எம்.ஏ.சி.எல். நஜீம், பாடசாலையின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் பங்கு கொண்டிருந்தனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...