Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

தனது செல்ல நாய்க்குட்டியுடன் விபத்தில் சிக்கி உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி!

T

The Leader Desk

ஜூன் 10, 2024 • 9:11 AM

தனது செல்ல நாய்க்குட்டியுடன் விபத்தில் சிக்கி உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கேகாலை மங்களகம பிரதேசத்தில் நேற்று முன்தினம் (08) இடம்பெற்ற வாகன விபத்தில் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக இறுதியாண்டில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் தனது செல்ல நாய்க்குட்டியுடன் உயிரிழந்துள்ளார்.
  • ரம்புக்கன, குடாகம, பொலத்தபிட்டிய பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய சனுரி இசுரிகா விக்ரமசிங்க என்பவரே உயிரிழந்துள்ளார்.
  • உயிரிழந்த மாணவி தனது வீட்டில் வளர்த்து வந்த நாய்க்குட்டிக்கு சிகிச்சை பெற்றுக் கொடுப்பதற்காக பேராதனை பிரதேசத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்த போது அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டி டிப்பர் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
எழுத்து அளவு:

கேகாலை மங்களகம பிரதேசத்தில் நேற்று முன்தினம் (08) இடம்பெற்ற வாகன விபத்தில் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக இறுதியாண்டில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் தனது செல்ல நாய்க்குட்டியுடன் உயிரிழந்துள்ளார்.

ரம்புக்கன, குடாகம, பொலத்தபிட்டிய பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய சனுரி இசுரிகா விக்ரமசிங்க என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவருடன் முச்சக்கரவண்டியில் பயணித்த அவரது இளைய சகோதரனும் மற்றுமொரு உறவினரும் விபத்தில் காயமடைந்து கேகாலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்த மாணவி தனது வீட்டில் வளர்த்து வந்த நாய்க்குட்டிக்கு சிகிச்சை பெற்றுக் கொடுப்பதற்காக பேராதனை பிரதேசத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்த போது அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டி டிப்பர் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த மாணவியும் வரும் செப்டம்பரில் பட்டம் பெறுவார் என எதிர்பார்த்திருந்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...