பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளதால், கோட்டை, மருதானை மற்றும் ஏனைய ரயில் நிலையங்களில் பயணிகள் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் இன்ஜின் சாரதிகள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் நான்காவது நாளாக இன்றும் (10) தொடர்கிறது.
லோகோமோட்டோ இயக்க பொறியாளர்கள் சங்கம் கடந்த வெள்ளிக்கிழமை (7) ரயில் சாரதிகளின் இரண்டாம் தர பதவி உயர்வு தாமதம், ஆட்சேர்ப்பில் தாமதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வு காணாமை போன்ற காரணங்களை முன்வைத் த ரயில்வே பொதுமுகாமையாளருக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த வேலை நிறுத்தத்தை தொடங்கியது.
இதன் காரணமாக சில ரயில் நிலையங்கள் வெறிச்சோடி, காணப்பட்டதால் பயணிகள் பஸ்களில் பயணம் செய்தனர்.
இந்த வேலைநிறுத்தம் காரணமாக வெள்ளிக்கிழமை காலை 43 ரயில் பயணங்களும், சனிக்கிழமை காலை முதல் மாலை 5.30 மணி வரை 76 பயணங்களும், நேற்று பிற்பகல் (9) வரை 35 ரயில் பயணங்களும் இரத்துச் செய்யப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மொரட்டுவை, கல்கிஸ்ஸ, சிலாபம் நீர்கொழும்பு, மீரிகம, அம்பேபுஸ்ஸ, ரம்புக்கன மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் கூறுகிறது.
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் இன்று (10) தொழிற்சங்கங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும், அங்கு தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ரயில்வேயின் மேலதிக பொது முகாமையாளர் வி.எஸ். பொல்வத்தகே தெரிவித்தார்.
இதேவேளை, அதிகாரிகளிடமிருந்து நேற்றைய தினம் எவ்வித தீர்வும் கிடைக்கப்பெறவில்லை எனவும், அதன் பிரகாரம் எஞ்சிய மூன்று நிலையங்களும் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் லோகோமோட்டோ பொறியாளர் சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.சி.எம். சேனநாயக்க தெரிவித்தார்.
கோட்டை, மருதானை உட்பட பல ரயில் நிலையங்களில் பயணிகள் கடும் அசௌகரியம்!
T
The Leader Desk
ஜூன் 10, 2024 • 7:02 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளதால், கோட்டை, மருதானை மற்றும் ஏனைய ரயில் நிலையங்களில் பயணிகள் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
- பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் இன்ஜின் சாரதிகள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் நான்காவது நாளாக இன்றும் (10) தொடர்கிறது.
- இந்த வேலைநிறுத்தம் காரணமாக வெள்ளிக்கிழமை காலை 43 ரயில் பயணங்களும், சனிக்கிழமை காலை முதல் மாலை 5.30 மணி வரை 76 பயணங்களும், நேற்று பிற்பகல் (9) வரை 35 ரயில் பயணங்களும் இரத்துச் செய்யப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
- போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் இன்று (10) தொழிற்சங்கங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும், அங்கு தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ரயில்வேயின் மேலதிக பொது முகாமையாளர் வி.எஸ்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

