Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

அம்பாறை மாவட்ட அரசியல் கட்டமைப்பு செயலிழந்து விட்டது! சலிப்படைந்த பிள்ளையான்

T

The Leader Desk

ஜூன் 10, 2024 • 4:18 AM

அம்பாறை மாவட்ட அரசியல் கட்டமைப்பு செயலிழந்து  விட்டது!  சலிப்படைந்த பிள்ளையான்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு அம்பாறையில் ஒரு கணக்காளரை கூட நியமிக்க முடியாதளவுக்கு அரசியல் இம்மாவட்டம் காணப்படுகிறது.
  • சிவநேசதுரை சந்திரக்காந்தன் எழுதிய “ஈஸ்டர் படுகொலை இன-மத நல்லிணக்கம் அறிதலும் புரிதலும்“ தொடர்பிலான நூல் அறிமுகம் அம்பாறை மாவட்டம் காரைதீவு மத்திய கல்லூரி ஒன்றுகூடல் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (9) இடம்பெற்ற போது அங்கு உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
  • காரைதீவு பகுதியில் அதிக எண்ணிக்கையான வைத்தியர்கள் உள்ளார்கள்.
எழுத்து அளவு:

விட்டது. எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு அம்பாறையில் ஒரு கணக்காளரை கூட நியமிக்க முடியாதளவுக்கு அரசியல் இம்மாவட்டம் காணப்படுகிறது.

மக்கள் கபிரதிநிதிகளாக ஆக்கப்பட்டுள்ள நாங்கள் அந்த மக்களின் அரசியல், பொருளாதார நிலைமைகளில் ஆழமான அறிவு கொண்டு உழைத்து வருகிறோம்.இந்த உழைப்பில் நாங்கள் அனைவரும் பங்குதாரர்களாக மாற வேண்டும். இது தமிழரசுக் கட்சியின் தனிப்பட்ட பிரச்சினை கிடையாது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரக்காந்தன் தெரிவித்தார்.

சிவநேசதுரை சந்திரக்காந்தன் எழுதிய “ஈஸ்டர் படுகொலை இன-மத நல்லிணக்கம் அறிதலும் புரிதலும்“ தொடர்பிலான நூல் அறிமுகம் அம்பாறை மாவட்டம் காரைதீவு மத்திய கல்லூரி ஒன்றுகூடல் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (9) இடம்பெற்ற போது அங்கு உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் உரையாற்றுகையில்,

நான் அரசியல் கடலில் தற்செயலாக நீந்திக் கொண்டிருக்கின்ற ஒரு மனிதன்.அல்லது இழுத்து வரப்பட்ட ஒரு மனிதன். எனக்கான அடையாளமும் அங்கீகாரமும் மட்டக்களப்பு மண்ணில்தான் கிடைத்திருக்கிறது.எனக்கு கிடைத்த அடையாளமும் அங்கீகாரத்தையும் சரியாக பயன்படுத்தி மக்கள் பணியாக மாற்றி செய்து காட்ட வேண்டிய மிகப் பெரிய பொறுப்பை தலையிலும் தோளிலும் சுமந்து கொண்டிருக்கின்றேன் என்பதை நீங்கள் எவரும் மறக்க மாட்டீர்கள்.

காரைதீவு பகுதியில் அதிக எண்ணிக்கையான வைத்தியர்கள் உள்ளார்கள். அங்கு அதிகளவான கார்கள் இருக்கின்றன. ஆனால் அங்கு பெற்றோல் நிரப்பும் நிலையம் இல்லை. இதுவும் ஒரு அரசியல்.இதுவும் எமது சமூகத்தின் பொருளாதார அரசியல்.இவ்வாறு உள்ள நிலையில் அம்பாறை மாவட்ட மக்களின் ஆணையை எவ்வாறு பெற்றுக் கொள்வது என்ற கேள்வி எழுகின்றது.

இந்த ஆணையை சரியாக எப்படி பயன்படுத்துவது? இப்போது எமது கட்சிக்கு இம்மாவட்டத்தில் அரசியல் செய்கயும் தேவை எழுந்துள்ளது என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...