Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

கிழக்கு மாகாண ஆசிரியர் நியமனங்கள் நிறுத்தப்பட்டமை துரதிர்ஷ்டம் என்கிறார் ஹரீஸ் எம்பி!

T

The Leader Desk

ஜூன் 9, 2024 • 9:51 AM

கிழக்கு மாகாண ஆசிரியர் நியமனங்கள் நிறுத்தப்பட்டமை  துரதிர்ஷ்டம் என்கிறார்  ஹரீஸ் எம்பி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நியமனங்களிலும் பல பாரபட்சங்கள் இடம்பெறுவதாக அறிகிறோம்.
  • தொடர்ந்தும் உரை யாற்றிய அவர், இப்படியான ஏற்பாடுகள் இந்தியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ளன.
  • ஹரீஸ் சபையில் கேட்டுக்கொண்டார்.
எழுத்து அளவு:

நியமனங்களிலும் பல பாரபட்சங்கள் இடம்பெறுவதாக அறிகிறோம். இது போன்று பல இடங்களிலும் பல்வேறு அசௌகரியங்கள், பாரபட்சங்கள் இடம்பெறுகின்றன.. 

எமது நாட்டிலுள்ள தமிழ் பேசும் மக்கள் அவற்றை மேன்முறையீடு செய்யவும்  விரைவான தீர்வுகளை பெறவும் "சிறுபான்மை இன நலன் ஆணைக்குழு" ஒன்றை நிறுவ அரசியலமைப்பு ரீதியாக ஏற்பாட்டை செய்ய வேண்டும் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான  எச்.எம்.எம். ஹரீஸ் சபையில் கேட்டுக்கொண்டார்.

 பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரை யாற்றிய அவர்,

இப்படியான ஏற்பாடுகள் இந்தியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ளன. எமது நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் நலன் கருதி "சிறுபான்மை இன நலன் ஆணைக்குழு" ஒன்றை நிறுவ பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் முன்வர வேண்டும். .மேலும், மிக நீண்ட கால கோரிக்கையாக இருந்து வரும் பொத்துவிலுக்கான தனியான கல்வி வலயத்தை உருவாக்கித் தருமாறும் கேட்டுக்கொண்டார்.

அமைச்சரவை அனுமதியுடன் மாகாண சபைகளினூடாக ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வரும் கல்வி அமைச்சு கிழக்கு மாகாணத்தில் கஷ்டப் பிரதேசங்களில் உள்ள ஆசிரிய வெற்றிடங்களையும் நிரப்ப  நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அந்தத் தேவையை பூர்த்தி செய்ய அண்மையில் கிழக்கு மாகாண சபை நடவடிக்கை எடுத்திருந்ததும் துரதிஷ்டமாக அந்த நியமனம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. கூடுதலான ஆசிரியர்களை கிழக்கு மாகாண பாடசாலைகளில் நியமிக்க விரைவாக நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கிழக்கு மாகாண ஆசிரியர் நியமனங்கள் நிறுத்தப்பட்டமை துரதிர்ஷ்டம் என்கிறார் ஹரீஸ் எம்பி! | Tamil Leader | We Lead the Nation