வைத்தியர் ஒருவர் செலுத்திச் சென்ற கார் மோதியதுடன் அவர் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், கல்முனை தலைமையக பொலிஸாரினால் அவரது கார் கைப்பற்றப்பட்டதுடன் வைத்தியரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் சனிக்கிழமை (8) இரவு இடம்பெற்றுள்ளதுடன் குறித்த விபத்தில் பாதிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் செலுத்திச் சென்ற இளைஞன் காயமடைந்த நிலையில் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த விபத்தை ஏற்படுத்திய வெள்ளை நிற கார் தப்பிச் சென்ற நிலையில் அதே வைத்தியசாலை வளாகத்தில் தரித்து நின்ற நிலையில் கல்முனை தலைமையக போக்குவரத்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு அதனைச் செலுத்தி சென்றதாக கூறப்படும் வைத்தியரும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்
இவ்வாறு கைதான வைத்தியர் என கூறப்படும் நபரிடம் பொலிஸார் வாக்குமூலத்தை பெற்று வருவதுடன் விரிவான விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
மேலும் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் இளைஞன் செலுத்தி சென்ற மோட்டார் சைக்கிளும் சேதமடைந்த நிலையில் கல்முனை பொலிஸ் நிலையத்துக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
கல்முனை அஷ்ரஃப் வைத்தியசாலை டாக்டர் கைது!
T
The Leader Desk
ஜூன் 9, 2024 • 6:22 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- வைத்தியர் ஒருவர் செலுத்திச் சென்ற கார் மோதியதுடன் அவர் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், கல்முனை தலைமையக பொலிஸாரினால் அவரது கார் கைப்பற்றப்பட்டதுடன் வைத்தியரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
- இந்தச் சம்பவம் சனிக்கிழமை (8) இரவு இடம்பெற்றுள்ளதுடன் குறித்த விபத்தில் பாதிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் செலுத்திச் சென்ற இளைஞன் காயமடைந்த நிலையில் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
- மேலும் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் இளைஞன் செலுத்தி சென்ற மோட்டார் சைக்கிளும் சேதமடைந்த நிலையில் கல்முனை பொலிஸ் நிலையத்துக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

