Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

புதிய கூட்டணியின் பேரணி கூட்டத்தில் முஷாரப், அலி சப்ரி பங்கேற்பு!

T

The Leader Desk

ஜூன் 8, 2024 • 3:49 PM

புதிய கூட்டணியின் பேரணி கூட்டத்தில் முஷாரப், அலி சப்ரி பங்கேற்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • புதிய கூட்டணியும் இணைந்து நடத்தும் முதலாவது மக்கள் பேரணி இன்று (08) பிற்பகல் 2.00 மணியளவில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் அம்பலாந்தோட்டை நகரில் பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் ஆரம்பமானது.
  • "எதிர்காலத்துக்காக ஒன்றுபடுவோம் - வெற்றிக்காக" என்ற தொனிப்பொருளில் பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் ஆரம்பமான அம்பலாந்தோட்டை பொதுப் பேரணி விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
எழுத்து அளவு:

புதிய கூட்டணியும் இணைந்து நடத்தும் முதலாவது மக்கள் பேரணி இன்று (08) பிற்பகல் 2.00 மணியளவில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் அம்பலாந்தோட்டை நகரில் பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் ஆரம்பமானது.

"எதிர்காலத்துக்காக ஒன்றுபடுவோம் - வெற்றிக்காக" என்ற தொனிப்பொருளில் பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் ஆரம்பமான அம்பலாந்தோட்டை பொதுப் பேரணி விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
 
புதிய வேலைத்திட்டத்தை வலுப்படுத்தி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து நடத்திய முதலாவது பொதுக்கூட்டத்தில் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும். 
 
எதிர்காலத்தில் இந்த வேலைத்திட்டத்தை மேலும் வலுப்படுத்தி, பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பரந்த கூட்டணியை உருவாக்குவோம் என கூட்டமைப்பின் தலைவர்கள் தெரிவிக்கின்றனர். 
 
நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, லசந்த ஜயரத்ன, சாமர லன்ச ஜயரத்ன, பிரியங்கா ஜயரத்ன, ஜகத் பிரியநாயக்க, ஜகத் பிரியங்கர, எஸ். எம். முஷாரப், அலி சப்ரி ரஹீம், நிமல் பியதிஸ்ஸ, பிரமநாத் சி.தொலவத்த, ஜகத் புஷ்பகுமார, சுதத் மஞ்சுள மற்றும் புதிய கூட்டணிக்கு ஆதரவளித்த பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மேயர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், சிவில் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர். 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...