வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளராகவிருந்த இந்துனில் ஜயவர்தனவின் மர்ம மரணம் தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவரது சடலம் கடந்த 4ஆம் திகதி காலை மோதர கடற்கரை பகுதியில் மீட்கப்பட்டது.
அவரது சடலம் கண்டெடுக்கப்படும்போது அவர் ரீ சேர்ட் டெனிம் மற்றும் பெல்ட் அணிந்திருந்ததாக மோதர பொலிஸார் பேச்சாளர் தெரிவித்தார்.
தேசிய அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பிலியந்தலை முகவரியின் அடிப்படையில் அவரது குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
இதனையடுத்து அவரது மனைவி அங்கு வந்து உடலை அடையாளம் காட்டினார்.
ஜூன் 3ஆம் திகதி தனது கணவர் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் அதன் பிறகு அவரைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் மனைவி கூறியதாக பொலிஸார் கூறுகின்றனர்.
அவர் சிலரால் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வாழ்க்கையில் விரக்தியடைந்து கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோதர பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஜி.ஜி.எஸ்.ஆர். சஞ்சீவாவின் அறிவுறுத்தலின்பேரில் சிறு முறைப்பாட்டு பிரிவு அதிகாரி சப் இன்ஸ்பெக்டர் ஜே.பி.எல். அநுரகுமார தலைமையில் பொலிஸ் கான்ஸ்டபிள் சந்தருவன் (103394) உள்ளிட்டவர்கள் இந்த மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, உயிரிழந்த இந்துனில் ஜயவர்தனவின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை கொழும்பில் உள்ள மரண விசாரணை அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்றது.
விசாரணைகள் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்ட போதிலும், மரணத்துக்கான காரணம் கண்டறிய முடியாததால் அவரது உடல் உறுப்புகளை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டது.
இது தொடர்பான பிரேத பரிசோதனையை கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி கே. கே. டி. கே. ஜயவீர மேற்கொண்டார்.
ஊடகவியலாளர் இந்துனில் ஜயவர்தன கடத்தப்பட்டு கொல்லப்பட்டார?
T
The Leader Desk
ஜூன் 8, 2024 • 4:13 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளராகவிருந்த இந்துனில் ஜயவர்தனவின் மர்ம மரணம் தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
- இவரது சடலம் கடந்த 4ஆம் திகதி காலை மோதர கடற்கரை பகுதியில் மீட்கப்பட்டது.
- ஜூன் 3ஆம் திகதி தனது கணவர் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் அதன் பிறகு அவரைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் மனைவி கூறியதாக பொலிஸார் கூறுகின்றனர்.
- அல்லது வாழ்க்கையில் விரக்தியடைந்து கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா?
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

