Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

மட்டு புன்னைச்சோலை வீட்டில் பணம், நகைகள் திருட்டு!

T

The Leader Desk

ஜூன் 7, 2024 • 7:18 AM

 மட்டு புன்னைச்சோலை வீட்டில் பணம், நகைகள் திருட்டு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • புன்னைச்சோலை பகுதியில் வீடு ஒன்றில் நேற்று (06) இரவு பெருமளவு பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டுள்ளன.
  • வீட்டுக்குவந்து பார்த்தபோது வீட்டின் படுக்கையறையிலிருந்த அலுமாரி உடைக்கப்பட்டு அதிலிருந்த 17 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணமும் நான்கரை பவுண் தங்க நகைகளும் திருடப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த சிசிரிவி கமராவின் டிஸ்க்கும் காணாமல் போயுள்ளது.
  • புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலயத்திற்கு பின்புறமாகவுள்ள வீடு ஒன்றிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எழுத்து அளவு:

புன்னைச்சோலை பகுதியில் வீடு ஒன்றில் நேற்று (06) இரவு பெருமளவு பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டுள்ளன.

புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலயத்திற்கு பின்புறமாகவுள்ள வீடு ஒன்றிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலய திருச்சடங்கு நடைபெற்றுவரும் நிலையில் வீட்டிலிருந்தவர்கள் வீடினை பூட்டி சாவியை வீட்டில் மறைத்து வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.

வீட்டுக்குவந்து பார்த்தபோது வீட்டின் படுக்கையறையிலிருந்த அலுமாரி உடைக்கப்பட்டு அதிலிருந்த 17 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணமும் நான்கரை பவுண் தங்க நகைகளும் திருடப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த சிசிரிவி கமராவின் டிஸ்க்கும் காணாமல் போயுள்ளது.

வீட்டின் மதில் பகுதியினால் பாய்ந்துவந்து மறைத்து வைத்திருந்த சாவியைஎடுத்து வீட்டுக்குள் நுழைந்தே இந்த திருட்டு இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மோப்பநாயின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியில் பொலிஸ் பொறுப்பதிகாரி ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸ் குழுவினரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

மட்டு புன்னைச்சோலை வீட்டில் பணம், நகைகள் திருட்டு! | Tamil Leader | We Lead the Nation