அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் அவருக்கு ஆதரவளிப்பதில் கட்சிக்குள் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் நாயகம் துமிந்த திஸாநாயக்க கொழும்பில் இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
ரணிலுக்கு சுதந்திரக் கட்சியின் நிமல் அணி ஆதரவு!
T
The Leader Desk
ஜூன் 6, 2024 • 1:41 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- பல கூட்டணிகள் உருவாகி வருவதாகவும் ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் மிகப்பெரிய கூட்டணி உருவானது என்றும் திஸாநாயக்க தெரிவித்தார்.
- கட்சியின் மத்திய குழு கூட்டப்பட்டு புதியவர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைவாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பதில் தலைவராக செயற்படுவார் எனவும் அவர் தெரிவித்தார்.
- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது.
எழுத்து அளவு:
ஆனால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் என்ன செய்வது என்பது தொடர்பில் கட்சி இன்னும் இறுதித் தீர்மானத்துக்கு வரவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது சகல விடயங்களையும் பூர்த்தி செய்துள்ளதாக தெரிவித்த அவர், கிராம மட்டத்தில் இருந்து கட்சியை மீண்டும் பலப்படுத்தி எதிர்வரும் தேர்தலுக்கு தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்.
பல கூட்டணிகள் உருவாகி வருவதாகவும் ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் மிகப்பெரிய கூட்டணி உருவானது என்றும் திஸாநாயக்க தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது.
கட்சியின் மத்திய குழு கூட்டப்பட்டு புதியவர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைவாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பதில் தலைவராக செயற்படுவார் எனவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பு டாலி வீதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே செயலாளர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

