Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

இலங்கை கிரிக்கெட் அணிக்கு அநீதிகள்; அதிகாரிகள் மௌனம் என்கிறார் சஜித்!

T

The Leader Desk

ஜூன் 6, 2024 • 8:26 AM

இலங்கை கிரிக்கெட் அணிக்கு அநீதிகள்; அதிகாரிகள் மௌனம் என்கிறார் சஜித்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கிரிக்கெட் அணிபல பிரச்சினைகளை சந்திக்க நேரிட்டுள்ளது.
  • மைதானத்துக்கும், கிரிக்கெட் வீரர்கள் தங்கியிருக்கும் விடுதிக்கும் இடையே 45 நிமிட இடைவெளி மாத்திரமே இருக்க வேண்டும் என ICC சட்ட திட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. என்றாலும் இங்கு ICC விதிமுறைகளை மீறி ஒன்றரை மணிநேரம் தூர இடைவெளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
  • இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உரிய கவனம் செலுத்தாமை கேள்விக்குறியாக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
  • இலங்கை கிரிக்கெட் அணிக்கு மட்டும் 4 தனித்தனி மைதானங்களில் போட்டிகள் பட்டியலிடப்பட்டுள்ளதால், விமான தாமதத்தால் பயிற்சி ஆட்டங்களில் கூட பங்கேற்க முடியாத நிலமை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

கிரிக்கெட் அணிபல பிரச்சினைகளை சந்திக்க நேரிட்டுள்ளது. மைதானத்துக்கும், கிரிக்கெட் வீரர்கள் தங்கியிருக்கும் விடுதிக்கும் இடையே 45 நிமிட இடைவெளி மாத்திரமே இருக்க வேண்டும் என ICC சட்ட திட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

என்றாலும் இங்கு ICC விதிமுறைகளை மீறி ஒன்றரை மணிநேரம் தூர இடைவெளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது தவிர இன்னும் பல பிரச்சினைகளை அவர்கள் எதிர்நோக்கி வருகின்றனர். இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உரிய கவனம் செலுத்தாமை கேள்விக்குறியாக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் அணிக்கு மட்டும் 4 தனித்தனி மைதானங்களில் போட்டிகள் பட்டியலிடப்பட்டுள்ளதால், விமான தாமதத்தால் பயிற்சி ஆட்டங்களில் கூட பங்கேற்க முடியாத நிலமை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இது தொடர்பில் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிய விரும்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

ஐ.சி.சி.யுடன் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் சிறந்த தொடர்புகளைக் கொண்டிருந்தாலும் தற்போது இலங்கை கிரிக்கெட் அணியினர் கடுமையான அநீதிக்குள்ளாகி வருகின்றனர். திரிந்து வீரர்களின் சோர்வை வேண்டுமென்றே அதிகரிக்கும் ஒரு செயல்பாடும் கூட முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் விளக்கமளிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...