Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளைப் பாதுகாப்பதற்கான விசேட வேலைத்திட்டம்! - சாகல

T

The Leader Desk

ஜூன் 4, 2024 • 6:16 AM

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளைப் பாதுகாப்பதற்கான விசேட வேலைத்திட்டம்! - சாகல

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தனிநபர்களின் வீடுகள் மற்றும் சொத்துக்களை பாதுகாப்பதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க, வலியுறுத்தினார்.
  • கொலன்னாவ பிரதேச செயலாளர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (03) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, ​​சமூக பொலிஸாரின் ஈடுபாட்டுடன் நடமாடும் ரோந்து முறைளை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளையும் ரத்நாயக்க எடுத்துரைத்தார்.
  • அனர்த்த நிலைமை முடியும்வரை மக்களுக்கு அத்தியாவசியமான நிவாரணங்களை வழங்குவதற்காக முப்படையினரும் செயற்படும் வகையில் தற்காலிக நிவாரண நிலையமொன்றை நிறுவுமாறும் அவர் பணித்தார்.
எழுத்து அளவு:

தனிநபர்களின் வீடுகள் மற்றும் சொத்துக்களை பாதுகாப்பதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை  தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க, வலியுறுத்தினார்.

கொலன்னாவ பிரதேச செயலாளர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (03) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, ​​சமூக பொலிஸாரின் ஈடுபாட்டுடன் நடமாடும் ரோந்து முறைளை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளையும் ரத்நாயக்க எடுத்துரைத்தார்.

wevwrv

அனர்த்தம் ஏற்பட்ட பகுதிகளில் மக்களுக்கு உணவு வழங்கும்போது கடுமையான சுகாதார நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு இராணுவத்துக்கு  அறிவுறுத்திய அவர், பாதிக்கப்பட்டவர்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதை உறுதிப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

UN0 5141 resize

அனர்த்த நிலைமை முடியும்வரை மக்களுக்கு அத்தியாவசியமான நிவாரணங்களை வழங்குவதற்காக முப்படையினரும் செயற்படும் வகையில் தற்காலிக நிவாரண நிலையமொன்றை நிறுவுமாறும் அவர் பணித்தார்.


UN0 4933 resize
டெங்கு, எலிக்காய்ச்சல் (லெப்டோஸ்பிரோசிஸ்) மற்றும் வயிற்றோட்டம் போன்ற தொற்றுநோய்களை கட்டுப்படுத்துவதற்கு உடனடியாக விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை  ரத்நாயக்க வலியுறுத்தினார்.

அனர்த்தம் காரணமாக முற்றாக சேதமடைந்த அனைத்து வீடுகளையும் அரச உதவியுடனும் ஆயுதப்படையினரின் பங்களிப்புடனும் புனரமைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...