Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

ஆளுங்கட்சி எம்பிக்கள் மோதல்: காயமடைந்த ராஜபக்க்ஷ இராணுவ வைத்தியசாலையில்!

T

The Leader Desk

ஜூன் 4, 2024 • 4:01 AM

ஆளுங்கட்சி எம்பிக்கள் மோதல்: காயமடைந்த ராஜபக்க்ஷ இராணுவ வைத்தியசாலையில்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஏற்பட்ட வாக்குவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்க்ஷ காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
  • நேற்று (03) மாலை ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டம் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
  • எவ்வாறாயினும், கூட்டத்தின் முடிவில் மஹிந்தானந்த அளுத்கம எம்.பி.க்கும் குணதிலக்க ராஜக்பக்ஷவுக்கும் இடையில் படிக்கட்டில் வைத்து வாக்குவாதம் ஏற்பட்டது.
எழுத்து அளவு:

ஏற்பட்ட வாக்குவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்க்ஷ காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று  (03) மாலை ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டம் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

அங்கு கண்டி மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு விவகாரம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்க்ஷவுக்கும் மஹிந்தானந்த அளுத்கவுக்கும் இடையில் காரசாரமான வார்த்தைப் பரிமாற்றம் இடம்பெற்றது.

இதன்போது பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் சமரவிக்ரம தலையிட்டு இவர்களுக்கிடையிலான வாக்குவாதத்தை சமரசம் செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், கூட்டத்தின் முடிவில் மஹிந்தானந்த அளுத்கம எம்.பி.க்கும் குணதிலக்க ராஜக்பக்ஷவுக்கும் இடையில் படிக்கட்டில் வைத்து வாக்குவாதம் ஏற்பட்டது.

இதன்போது மஹிந்தானந்த எம்பி  குணதிலக்க ராஜபக்க்ஷவை  தள்ள முற்பட்டபோது குணதிலக்க ராஜபக்க்ஷ  மாடிப்படியில் வீழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது படுகாயமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள்  தெரிவித்துள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஆளுங்கட்சி எம்பிக்கள் மோதல்: காயமடைந்த ராஜபக்க்ஷ இராணுவ வைத்தியசாலையில்! | Tamil Leader | We Lead the Nation