Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

தேர்தலுக்கு தயாராகும் ஐ.தே. க: குழு நியமனம், நிர்வாகத்திலும் சிறிய மாற்றம்!

T

The Leader Desk

ஜூன் 3, 2024 • 8:16 AM

தேர்தலுக்கு தயாராகும் ஐ.தே. க:  குழு நியமனம், நிர்வாகத்திலும் சிறிய மாற்றம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இலக்காகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி புதிய குழுவொன்ற நேற்று (02) நியமித்துள்ளது.
  • ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா கட்சியின் தேர்தல் பிரதிப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இதற்கான கூட்டம் இடம்பெற்றது.
எழுத்து அளவு:

இலக்காகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி  புதிய குழுவொன்ற  நேற்று (02) நியமித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இதற்கான கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய தேர்தல் அமைப்பாளராக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டதுடன் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கட்சியின் தேர்தல் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா கட்சியின் தேர்தல் பிரதிப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தவிர, ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகிகள் குழுவில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு பிரோஸ் பாரூக் ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாளராகவும் பொருளாளராக இருந்த மிஸ்பா சத்தார் உப தலைவராகவும் கிரிஷான் தியோடர் துணைப் பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தவிசாளர் ருவான் விஜயவர்தன, பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, தவிசாளர்  வஜிர அபேவர்தன, தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க, பிரதித் தலைவர் அகில விராஜ் காரியவசம் உள்ளிடவர்கள் அதே பதவிகளை தொடர்ந்தும் வகிக்கும செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...