Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

ரணிலுக்கே எங்கள் ஆதரவு! -அமைச்சர் டக்ளஸ்

T

The Leader Desk

ஜூன் 2, 2024 • 1:47 PM

ரணிலுக்கே எங்கள் ஆதரவு! -அமைச்சர் டக்ளஸ்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அரசியல்வாதிகள்தான் காரணம் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
  • போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்துமாறு கோரிக்கை அமைச்சரவையில் முன்வைத்திருந்தேன்.
  • கிளிநொச்சி தருமபுரம் வைத்தியசாலை மற்றும் போதைப்பொருள் புனர்வாழ்வு நிலையம் ஆகியவற்றின் நிலைமைகளை பார்வையிட்டதன் பின்னர் மக்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

அரசியல்வாதிகள்தான் காரணம் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி தருமபுரம் வைத்தியசாலை மற்றும் போதைப்பொருள் புனர்வாழ்வு நிலையம் ஆகியவற்றின் நிலைமைகளை பார்வையிட்டதன் பின்னர் மக்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், கிளிநொச்சி மாவட்டத்தின் வைத்திய தேவைகளை நிவர்த்தி செய்து தருமாறு இங்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
இந்தக் கோரிக்கைகளை நான் அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளேன்.

குறிப்பாக யாழ். போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்துமாறு கோரிக்கை அமைச்சரவையில் முன்வைத்திருந்தேன். அதற்கு ஜனாதிபதியும் உறுதிமொழி வழங்கியிருக்கின்றார்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினை மற்றும் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார பிரச்சினை ஆகியவற்றிலிருந்து நாட்டை மீட்டெடுத்த பாரிய பொறுப்பு ரணில் விக்ரமசிங்கவையே சாரும். ஆகவே அவருக்குத்தான் எங்கள் ஆதரவும் இருக்கும்.

அதேவேளை, தமிழ் மக்களினுடைய பிரச்சினைகளுக்கு தமிழ் அரசியல்வாதிகள் தான் காரணம்” என தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ரணிலுக்கே எங்கள் ஆதரவு! -அமைச்சர் டக்ளஸ் | Tamil Leader | We Lead the Nation