Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

ஹரீஸின் 'நாடகமாடல்' தொடர்பில் ஹக்கீமுக்கு எகிப்து தூதரகம் கடிதம்!

T

The Leader Desk

ஜூன் 2, 2024 • 7:43 AM

ஹரீஸின் 'நாடகமாடல்' தொடர்பில் ஹக்கீமுக்கு எகிப்து தூதரகம் கடிதம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.
  • ஹரீஸ் கடந்த மே 8 ஆம் திகதி பலஸ்தீன முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் ரபா பிரதேசத்தில் இஸ்ரேலிய இராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் தொடர்பிலும் கண்டித்து பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு எகிப்து தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
  • பலஸ்­தீன மக்­களைப் பலி கொடுப்­ப­தற்­காக ரபா எல்லைப் பிர­தேசம் இஸ்­ரே­லிய இரா­ணு­வத்­துக்காக திறந்­து­ வி­டப்­பட்­டி­ருக்­கிறது எனவும் கூறியிருந்தார்.
எழுத்து அளவு:
தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸ் கடந்த மே 8 ஆம் திகதி பலஸ்தீன முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும்  ரபா பிரதேசத்தில் இஸ்ரேலிய இராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் தொடர்பிலும் கண்டித்து பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு எகிப்து தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
 
இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹு மீது இடி விழுந்து சாக வேண்டும் என்றும் கூறியிருந்த அவர் “இஸ்­ரே­லிய பிர­தமர் நெதன்­யா­கு­வையும் அந்­நாட்டின் கொடுங்கோல் இரா­ணு­வத்­தையும் கட்­டுப்­ப­டுத்த முடி­யாமல் பக்­கத்தில் உள்ள எகிப்து ஜனா­தி­பதி நாட­க­மாடிக் கொண்­டி­ருக்­கிறார்.
 
பலஸ்­தீன மக்­களைப் பலி கொடுப்­ப­தற்­காக ரபா எல்லைப் பிர­தேசம் இஸ்­ரே­லிய இரா­ணு­வத்­துக்காக திறந்­து­ வி­டப்­பட்­டி­ருக்­கிறது  எனவும் கூறியிருந்தார்.
 
இதுதொடர்பில் இலங்கையிலுள்ள எகிப்து தூதரகம் பலஸ்தீன தூதரகம் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸின் உரை தொடர்பில் தமது நிலைப்பாட்டை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு உத்தியோகபூர்மாக அறிவித்துள்ளது.
 
பலஸ்­தீன விட­யத்தில் எகிப்து சர்­வ­தேச அரங்­கிலும் உள்­நாட்­டிலும் தேவை­யான அனைத்துவழி­க­ளிலும் பல உத­வி­களை தொடர்ச்­சி­யாக வழங்கி வரு­வதாகவும் ஹரீஸ் எம்.பியின் இந்த உரை காரணமாக சர்வதேச மட்டத்தில் எகிப்தை பிழையான கண்ணோட்டத்தில் நோக்குவதாகவும் இதனால் பல்வேறு இக்கட்டான நிலைகள் தோன்றியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
 
எகிப்து பலஸ்தீனுக்கு வழங்கும் ஆதரவு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸுக்கு இந்த விடயத்தை தெளிவுபடுத்துமாறும் தெரிவித்து இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி. ஸுஹைர் எம். எச். டார் செயிட் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.  
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...