Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு: இலங்கையில் கைதானவர்களின் வங்கிக் கணக்குகள் விசாரணையில்!

T

The Leader Desk

ஜூன் 2, 2024 • 4:13 AM

ஐ.எஸ் அமைப்புடன்  தொடர்பு: இலங்கையில் கைதானவர்களின் வங்கிக் கணக்குகள் விசாரணையில்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கைது செய்யப்பட்ட மூவரின் வங்கிக் கணக்குகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பணம் பெறப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்துவதற்கு பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் கோட்டை நீதிவான் நீதிமன்றில் அனுமதி பெற்றுள்ளனர்.
  • அத்துடன், இணையதளத்தில் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அது தொடர்பான ஆதாரங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • இதன் அடிப்படையில் தெமட்டகொட பிரதேசத்தை சேர்ந்த 46 வயதான ஜெராட் புஷ்பராஜா ஒஸ்மான் ஜெராட் என்பவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எழுத்து அளவு:

கைது செய்யப்பட்ட மூவரின் வங்கிக் கணக்குகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பணம் பெறப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்துவதற்கு பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் கோட்டை நீதிவான் நீதிமன்றில் அனுமதி பெற்றுள்ளனர்.

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களுடன் தொடர்பு வைத்திருந்த சந்தேகத்தின் பேரிலேயே இலங்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டனனனனனனர்.

அத்துடன், இணையதளத்தில் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அது தொடர்பான ஆதாரங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்டு இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாகவும் அவர்களுக்கு ஆதரவாகவும் சந்தேகிக்கப்படும் நபரைக் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கடந்த சனிக்கிழமை கோரியிருந்தனர்.

இதன் அடிப்படையில் தெமட்டகொட பிரதேசத்தை சேர்ந்த 46 வயதான ஜெராட் புஷ்பராஜா ஒஸ்மான் ஜெராட் என்பவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு: இலங்கையில் கைதானவர்களின் வங்கிக் கணக்குகள் விசாரணையில்! | Tamil Leader | We Lead the Nation