Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

இலங்கை அரசியலின் ஹிட்லர் ,மொசாட் உறவினர்கள் தொடர்பில் இம்தியாஸ் பாக்கீர் மாகார் கருத்து!

T

The Leader Desk

ஜூன் 1, 2024 • 7:32 AM

இலங்கை அரசியலின் ஹிட்லர் ,மொசாட் உறவினர்கள் தொடர்பில் இம்தியாஸ் பாக்கீர் மாகார் கருத்து!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தூர நோக்கோடு நன்கு சிந்தித்து நாட்டினதும் மக்களினதும் விமோசன் கருதி வாக்களிக்க வேண்டும்.
  • ஜனநாயகம் பற்றி பேசுபவர்கள் ஜனநாயகத்தை கட்டி காப்பவர்கள் என்று சொல்லும் ஒருவரின் நாவில் இருந்து இப்படியான கூற்று வரவே முடியாது.
  • நாம் வரலாற்றில் பாடம் கற்றுக்கொண்டு விழுந்த படுகுழியில் மீண்டும் ஒருமுறை விழுந்து விடாமல் புத்திசாலித்தனமாக தீர்மானம் ஒன்றை எடுத்தால் அது பயனுள்ளதாக அமையும் மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் இம்தியா ஸ் பாக்கீர் மாகக்கார் கூறினார்.
எழுத்து அளவு:

தூர நோக்கோடு நன்கு சிந்தித்து நாட்டினதும் மக்களினதும் விமோசன் கருதி வாக்களிக்க வேண்டும். நாம் வரலாற்றில் பாடம் கற்றுக்கொண்டு விழுந்த படுகுழியில் மீண்டும் ஒருமுறை விழுந்து விடாமல் புத்திசாலித்தனமாக தீர்மானம் ஒன்றை எடுத்தால் அது பயனுள்ளதாக அமையும் மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் இம்தியா ஸ் பாக்கீர் மாகக்கார் கூறினார்.

களுத்துறையில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்ட பின் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இம்தியாஸ் எம்.பி. மேலும் கூறியதாவது அரசியலமைப்பின்படி தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு எவருக்கும் முடியாது அரசியலமைப்பின் பிரகாரம் நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும். இத்தேர்தலை எவருக்கும் பின் போட முடியாது.எந்த ஒரு தேர்தல் தொடர்பிலும் அறிவிக்கும் பொறுப்பு தேர்தல் ஆணைக்குழுவுக்கே இருக்கிறது என்பதை நாட்டு மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். தேர்தல் நடத்துவது தொடர்பில் அரசியல்வாதிகளுக்கு முடிவெடுக்க முடியாது.

ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுத் தேர்தலை நடத்த தேவையில்லை என்று கூறியிருப்பது பற்றி நான் அதிர்ச்சி அடைகிறேன். ஜனநாயகம் பற்றி பேசுபவர்கள் ஜனநாயகத்தை கட்டி காப்பவர்கள் என்று சொல்லும் ஒருவரின் நாவில் இருந்து இப்படியான கூற்று வரவே முடியாது.

அரசியலில் மிகவும் பொறுப்பு வாய்ந்த பதவியை வகிக்கும் ஒருவரின் நாவினால் இவ்வாறான வார்த்தை வெளிவருவதாயின் அவர் ஹிட்லரின்,மொசாட்டின் உறவினராகவே இருக்க வேண்டும் என நான் கருதுகிறேன்.

வரலாற்றில் நடந்த சம்பவங்களை,விடயங்களை நினைவில் வைத்து நடைபெறவுள்ள தேர்தலில் மிகவும் புத்திசாலித்தனமான தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும். தேர்தல் ஒன்று நெருங்கும் போது எப்போதும் ஏதாவது பூச்சாண்டி காட்டுவது வழமையாகி விட்டதை நாம் காண்கிறோம்.

அது தேசிய அரசியல் குறுகிய நோக்கங்களை அடைந்து கொள்வதற்காகவே இருக்கும்.சில சமயங்களில் அது சர்வதேச அரசியலில் குறுகிய நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக அமைந்திருக்கும். இப்படியான பூச்சாண்டிகளை நாங்கள் உலக அரசியலிலும் இலங்கை அரசியலிலும் காண்கிறோம்.

எனவே வரலாற்றில் பாடம் கற்றுக் கொண்டு மீண்டுமொரு முறை படு குழியில் விழுந்து விடாமல் எதிர்வரும் தேர்தலில் புத்திசாலித்தனமாக தீர்மானம் எடுப்பது மக்கள் பொறுப்பாகும். தவறான தீர்மானம் எடுத்தால் நாடு அதல பாதாளத்திற்குச் செல்லும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்றும் அவர் கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இலங்கை அரசியலின் ஹிட்லர் ,மொசாட் உறவினர்கள் தொடர்பில் இம்தியாஸ் பாக்கீர் மாகார் கருத்து! | Tamil Leader | We Lead the Nation