Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பு: அலரி விதை உட்கொண்டு உயிரிழந்த யுவதி!

T

The Leader Desk

ஜூன் 1, 2024 • 4:16 AM

காதலுக்கு எதிர்ப்பு: அலரி விதை உட்கொண்டு உயிரிழந்த யுவதி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கோரியதால் அலரி விதை உட்கொண்ட யுவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
  • சம்பவத்தில் 18 வயதான மகேந்திரன் புவிதா என்ற யுவதியே கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வியாழக்கிழமை (30) இரவு அனுமதிக்கப்பட்டு மறுநாள் வெள்ளிக்கிழமை (31) அதிகாலை 2.45 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
  • இதனையடுத்து வீட்டை விட்டு வெளியேறி சென்ற யுவதி மீண்டும் 15 நிமிடம் மீண்டும் தனது வீட்டுக்கு வந்துள்ளார்.
  • இவ்வாறு வந்த யுவதி வீட்டைச.
எழுத்து அளவு:

கோரியதால் அலரி விதை உட்கொண்ட யுவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் மட்டக்களப்பு  வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மண்டூர் தெற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 18 வயதான மகேந்திரன் புவிதா என்ற யுவதியே கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வியாழக்கிழமை (30) இரவு அனுமதிக்கப்பட்டு மறுநாள் வெள்ளிக்கிழமை (31) அதிகாலை 2.45 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

குறித்த உயிரிழந்த யுவதியின் தாயார் வெளிநாடு ஒன்றில் பணிபுரிந்த நிலையில் இலங்கைக்கு வந்து 3 மாதங்கள் சென்றுள்ளதாகவும் யுவதி 2 வருடங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள புனர்வாழ்வு நிலையம் ஒன்றில் தங்கி இருந்த நிலையில் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய  யுவதியின் தாய் வீட்டுக்கு அழைத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் ஏலவே யுவதியுடன் காதல் தொடர்பில் இருந்த இளைஞன் காதலியின  வீட்டுக்குச் சென்று யுவதியுடன  மீண்டும் காதல் தொடர்புகளை பேணிய போது யுவதியின் தாயார் கண்டித்துள்ளார்.

இதனையடுத்து வீட்டை விட்டு வெளியேறி சென்ற யுவதி மீண்டும் 15 நிமிடம் மீண்டும் தனது வீட்டுக்கு வந்துள்ளார்.

இவ்வாறு வந்த யுவதி  வீட்டைச. சுத்தம் செய்த பின்னர் தனது தாயாருடன் சிறிது உரையாடிய விட்டு தான் அலரி விதை உட்கொண்டு விட்டதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரை உடனடியாக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்துள்ளார்.

குறித்த உயிரிழந்த யுவதியின் மரணம் தொடர்பில்  கல்முனை  நீதிமன்ற நீதிவானின் கட்டளையின் பிரகாரம் மரண விசாரணை அதிகாரி முகமட் இப்றாகீம் நஸ்றுல் இஸ்லாம் முன்னிலையில்  விசாரணைகள் இடம்பெற்றது.

அத்துடன்  குறித்த  மரணமடைந்த யுவதியின்   பிரேத பரிசோதனை இடம்பெற்ற பின்னர் அரச பகுப்பாய்வுககாக சில உடல் உறுப்புகள் அனுப்பி வைக்கப்பட்டு  பின்னர்  சடலம்  உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...