Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

கல்முனையில் முகம்மட் ஆதிக் மீது தாக்குதல்: நகைக்கடை உரிமையாளர் கைது!

T

The Leader Desk

மே 31, 2024 • 6:25 PM

கல்முனையில் முகம்மட் ஆதிக் மீது  தாக்குதல்: நகைக்கடை உரிமையாளர் கைது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஏற்பட்ட சம்பவத்தையடுத்து தலைமறைவான நகைக் கடை உரிமையாளர் ஒருவர் கல்முனை தலைமையக பொலிஸாரினால் கைது செய்துள்ளனர்.
  • கடந்த வியாழக்கிழமை (30) மாலை கட்டடம் அமைத்து வந்த தரப்பினரின் சார்பில் அங்கு வேலை செய்யும் 18 வயது மதிக்கத்தக்க முஹம்மட் நசார் முகமட் ஆதிக் என்ற இளைஞர் நகைக்கடை உரிமையாளர் குழுவினரால் தாக்கப்பட்டுள்ளார்.
  • அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் புதிதாக கட்டடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு உரிய அனுமதியையும் நடைமுறைகளையும் பின்பற்றி ஒரு சாரார் கட்டடம் ஒன்றை நிர்மாணித்து வந்துள்ளனர்.
எழுத்து அளவு:

ஏற்பட்ட சம்பவத்தையடுத்து தலைமறைவான  நகைக் கடை உரிமையாளர் ஒருவர் கல்முனை தலைமையக பொலிஸாரினால் கைது செய்துள்ளனர்.

இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த இளைஞரை தாக்கிய சந்தேக நபரான நகைக்கடை உரிமையாளர் தலைமறைவாகி பின்னர் தானும் தாக்கப்பட்டதாகக் கூறி  கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதியாகியிருந்தபோதே அங்கு சென்ற கல்முனை தலைமையக பொலிஸார் அவரைக் கைது செய்து வைத்தியசாலையில் பொலிஸாரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் புதிதாக கட்டடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு உரிய அனுமதியையும் நடைமுறைகளையும் பின்பற்றி ஒரு சாரார் கட்டடம் ஒன்றை நிர்மாணித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த கட்டடம் உரிய அனுமதி பெறாமல் கட்டப்படுகிறது எனக் நகைக் கடை உரிமையாளர் ஒருவர் தனது குழுவுடன் தொடர்ச்சியாக தடை ஏற்படுத்தி புகைப்படம் எடுத்து அச்சுறுத்தி வருவதாக  இளைஞனின் தரப்பினர் முன்னர் குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்நிலையில். கடந்த வியாழக்கிழமை (30) மாலை கட்டடம் அமைத்து வந்த தரப்பினரின் சார்பில் அங்கு வேலை செய்யும் 18 வயது மதிக்கத்தக்க முஹம்மட் நசார்  முகமட் ஆதிக்  என்ற இளைஞர் நகைக்கடை உரிமையாளர் குழுவினரால் தாக்கப்பட்டுள்ளார்.

இதனைடுத்து குறித்த தாக்குதலில் காயமடைந்த இளைஞர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், குறித்த தாக்குதலில் ஈடுபட்ட நகைக் கடை உரிமையாளர் எனக் கூறப்படும்  நபர் தானும் தாக்கப்பட்டதாக கூறி கல்முனை ஆதார வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நிலையிலேயே கைது செய்யப்பட்டார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கல்முனையில் முகம்மட் ஆதிக் மீது தாக்குதல்: நகைக்கடை உரிமையாளர் கைது! | Tamil Leader | We Lead the Nation