எதிர்வரும் இரண்டு வாரங்களில் இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்தால் ஜூலை மாத நடுப்பகுதிக்குள் கட்டணக் குறைப்பை நடைமுறைப்படுத்த முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மின் கட்டணத்தை குறைப்பதற்கான பிரேரணையை மே மாதம் முதலாம் திகதி சமர்ப்பிக்க வேண்டும் ஆனால் மேலும் இரண்டு வாரங்கள் கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென மின்சார சபை கோரிக்கை விடுத்திருந்தது.
எனவே, குறித்த பிரேரணை கிடைக்கப்பெற்றதும் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக் கொண்ட பின்னர் அமுல்படுத்தலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான யோசனை அடுத்த வாரம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபையின் உத்தியோகபூர்வ வருடாந்த மின் கட்டண திருத்தத்தின் பிரகாரம், ஜூலை 1 ஆம் திகதி மின்சார கட்டணங்கள் திருத்தப்பட வேண்டும்.
மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு கூறுவது...
T
The Leader Desk
மே 31, 2024 • 1:52 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- எதிர்வரும் இரண்டு வாரங்களில் இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்தால் ஜூலை மாத நடுப்பகுதிக்குள் கட்டணக் குறைப்பை நடைமுறைப்படுத்த முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
- எனவே, குறித்த பிரேரணை கிடைக்கப்பெற்றதும் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக் கொண்ட பின்னர் அமுல்படுத்தலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
- இலங்கை மின்சார சபையின் உத்தியோகபூர்வ வருடாந்த மின் கட்டண திருத்தத்தின் பிரகாரம், ஜூலை 1 ஆம் திகதி மின்சார கட்டணங்கள் திருத்தப்பட வேண்டும்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

