கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துக்கு தமது ஆதரவை நல்கும் நோக்கில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (மொட்டு) மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேலும் பல மாகாண சபை, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர்.
பொலன்னறுவை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதி யமைச்சருமான நந்தசேன ஹேரத், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, திருகோணமலை மாவட்டத்ததைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் திருமதி ஆரியவதி கலப்பதி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கம்பஹா மாவட்டத்தில் இருந்து மேல் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட திலிப குமார ராஜபக்க்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, களுத்துறை மாவட்டத்தில் மேல் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட அனில் குமார விஜேசிங்ஹ ஆகியோர் அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர்.
மேலும் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி கம்பஹா மாவட்டத்தில் மேல் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட ரெஹென்சிறி வராகொட மற்றும் களுத்துறை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் பிரசன்ன விதானகே ஆகியோரும் நேற்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர்.
பொதுஜன பெரமுன, சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பலர் சஜித்துடன் இணைந்தனர்!
T
The Leader Desk
மே 31, 2024 • 4:46 AM
கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துக்கு தமது ஆதரவை நல்கும் நோக்கில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (மொட்டு) மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேலும் பல மாகாண சபை, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

