Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

வடமேல் மாகாணத்தில் முதலீடு: இந்திய முதலீட்டாளர்கள் ஆர்வம்!

T

The Leader Desk

மே 30, 2024 • 5:42 PM

வடமேல் மாகாணத்தில் முதலீடு: இந்திய முதலீட்டாளர்கள் ஆர்வம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதன்போது வடமேல் மாகாணத்தை இலங்கையின் கால்நடை உற்பத்தித் துறையின் மையப்புள்ளியாக மாற்றும் வகையிலான சகல வளங்களும் காணப்படுவதாகவும் முதலீட்டாளர்களுக்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதற்குத் தயாராக இருப்பதாகவும் ஆளுனர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
  • அதேபோன்று எதிர்வரும் ஜூன் 19 ஆம் திகதி சுமார் 70க்கும் குறையாத இந்திய முதலீட்டாளர்கள் குழுவொன்றை அழைத்து வந்து, வடமேல் மாகாண முதலீடுகள் குறித்து ஆய்வொன்றை நடத்தவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
  • இந்தச் சந்திப்பின்போது இந்தியாவுக்கான இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி டீ.
எழுத்து அளவு:

தொழில்நுட்பத்துறை, கால்நடை வளர்ப்பு மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தித்தொழிற்சாலைகளை நிறுவுவதில் இந்திய முதலீட்டாளர்கள் ஆர்வம் தெரிவித்துள்ளனர். 

சென்னையில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின்  பிரதி உயர் ஸ்தானிகர் கலாநிதி டீ.வெங்கடேஸ்வரன் தலைமையில் அமெரிக்காவில் தலைமையகத்தைக் கொண்டியங்கும் போர்ட்ரஸ் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பிரதிநிதிகள்  இன்றைய தினம் (30)  வடமேல் மாகாண ஆளுனர் நஸீர் அஹமதை சந்தித்து , வடமேல் மாகாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்து  கலந்தாலோசனை  நடத்தினர்.
 
இதன்போது வடமேல் மாகாணத்தை இலங்கையின் கால்நடை உற்பத்தித் துறையின் மையப்புள்ளியாக மாற்றும் வகையிலான சகல வளங்களும் காணப்படுவதாகவும் முதலீட்டாளர்களுக்கான அனைத்து வசதிகளையும்  செய்து கொடுப்பதற்குத் தயாராக இருப்பதாகவும் ஆளுனர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
 
IMG 20240530 225551 800 x 533 pixel
 
தகவல் தொழில்நுட்பம், இயற்கை எரிவாயு உற்பத்தி, ஹைட்ரஜன் வாயு உற்பத்தி போன்றவற்றை மேற்கொள்ளும் வகையிலான பாரிய தொழிற்சாலைகளை வடமேல் மாகாணத்தில் நிறுவுவதற்கான விருப்பத்தை வெளியிட்ட இந்திய முதலீட்டாளர்கள், அதற்கான வாய்ப்புகள் மற்றும் வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு கௌரவ ஆளுனரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
 
அதேபோன்று எதிர்வரும் ஜூன் 19 ஆம் திகதி சுமார் 70க்கும் குறையாத இந்திய முதலீட்டாளர்கள் குழுவொன்றை அழைத்து வந்து, வடமேல் மாகாண முதலீடுகள் குறித்து ஆய்வொன்றை நடத்தவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
 
இந்தச் சந்திப்பின்போது இந்தியாவுக்கான இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி டீ. வெங்கடேஸ்வரன், வடமேல் மாகாண பிரதம செயலாளர் தீபிகா குணரத்ன, ஆளுனரின் செயலாளர் இலங்கக்கோன் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...