Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

ஹரீஸ் எம்பிக்கு பணம் வழங்கியதனை அம்பலப்படுத்தும் யஹியாகான்!

T

The Leader Desk

மே 30, 2024 • 2:51 PM

ஹரீஸ் எம்பிக்கு பணம் வழங்கியதனை அம்பலப்படுத்தும் யஹியாகான்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வாழ்வாதார உதவிகளை வழங்கப் போவதாகவும் - அதற்கான பெயர்ப்பட்டியலை தருமாறு என்னிடம் கேட்ட ஹரீஸ் எம்பி , அதற்கு மாற்றமாக " யஹியாகான் பௌண்டேஷனுக்கு " நிதி ஒதுக்கியமைக்கு காரணம் என்ன ? அவ்வாறான நிதி எனக்கோ அல்லது எனது பௌண்டேஷனுக்கோ வேண்டாம்.
  • ஹரீஸ் எம்பி கூட அவர் வகித்த அமைச்சின் ஊடாகவோ அல்லது இவ்வாறான பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு மூலமாகவோ ஒரு சதமேனும் ஒதுக்கித் தராத இவர் - இப்போது , இரண்டரை இலட்சம் ரூபா ஒதுக்கியிருப்பது என்னை அவமானத்துக்குள்ளாக்க எடுக்கப்பட்ட முயற்சியாகவே பார்க்கிறேன்.
  • இவ்வாறான நிதிகள் எனக்கு வேண்டாம். கடந்த 14 வருடங்களாக உங்கள் அரசியல் நடவடிக்கைகளுக்கு நான் நிறைய பண ரீதியான உதவியை செய்திருக்கிறேன்.
எழுத்து அளவு:

வாழ்வாதார உதவிகளை வழங்கப் போவதாகவும் - அதற்கான பெயர்ப்பட்டியலை தருமாறு என்னிடம் கேட்ட ஹரீஸ் எம்பி , அதற்கு மாற்றமாக " யஹியாகான் பௌண்டேஷனுக்கு " நிதி ஒதுக்கியமைக்கு காரணம் என்ன ? 

அவ்வாறான நிதி எனக்கோ அல்லது எனது பௌண்டேஷனுக்கோ வேண்டாம். அதனை அவரோடு இருப்பவர்களுக்கு வழங்குமாறு கூறி நிராகரித்து விட்டேன்.
 
இவ்வாறு - முஸ்லிம் காங்கிரஸின் பிரதிப் பொருளாளர் ஏ.சி. யஹியாகான் தெரிவித்தார்.
 
ஹரீஸ் எம்பியின் வேண்டுகோளின் பேரில் அவரது செயலாளர் - இந்த வாழ்வாதார பெயர்ப் பட்டியலை வற்புறுத்தி பெற்றுக் கொண்டார். 
 
நானும் - மக்களை தெரிவு செய்து தையல் இயந்திரம் மற்றும் இதர வாழ்வாதார உபகரணங்களையும் உள்ளடக்கிய பெயர்ப்பட்டியலை அனுப்பி வைத்தேன். ஆனால், அவற்றை நிராகரித்து விட்டு எனது பௌண்டேஷனுக்கு நிதி ஒதுக்கியுள்ளார்.
இதனை அவதானித்த போது பெரும் ஆச்சரியமும் ஆத்திரமும் அடைந்தேன்.
 
14 வருடங்களாக - எனது சொந்த நிதியில் செயற்பட்டு வரும் யஹியாகான் பௌண்டேஷனுக்கு - நான் யாரிடமும் கையேந்தியது கிடையாது. ஹரீஸ் எம்பி கூட அவர் வகித்த அமைச்சின் ஊடாகவோ அல்லது இவ்வாறான பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு மூலமாகவோ ஒரு சதமேனும் ஒதுக்கித் தராத இவர் - இப்போது , இரண்டரை இலட்சம் ரூபா ஒதுக்கியிருப்பது என்னை அவமானத்துக்குள்ளாக்க எடுக்கப்பட்ட முயற்சியாகவே பார்க்கிறேன்.
 
யஹியாகான் பௌண்டேஷனை எந்தவொரு நபராலும் மழுங்கடிக்க இடமளிக்கமாட்டேன் என்பதை ஹரீஸ் எம்பிக்கு கூறிவைக்க விரும்புகிறேன். எனது பௌண்டேஷனுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை உங்களுக்கு அருகில் இருப்பவர்களுக்கு பகிர்ந்து கொடுங்கள்.
 
பண விடயத்தில் நான் போதுமானளவு நிதியை வைத்துள்ளேன். இவ்வாறான நிதிகள் எனக்கு வேண்டாம். 
 
கடந்த 14 வருடங்களாக உங்கள் அரசியல் நடவடிக்கைகளுக்கு நான் நிறைய பண ரீதியான உதவியை செய்திருக்கிறேன். அப்படிப்பட்ட எனக்கு , எனது பௌண்டேஷனுக்கு  இந்த  இரண்டரை இலட்சம் ரூபா எதற்கு என்று கேட்க விரும்புகின்றேன். உங்களை -  பணத்துக்காக துதி பாடுவோருக்கு இந்த தொகையை பிரித்துக் கொடுங்கள். 
 
அத்துடன் , குறித்த நிதியை நிராகரித்தமைக்கான கடிதத்தை சாய்ந்தமருது பிரதேச செயலாளருக்கும் அனுப்பி வைத்துள்ளேன் என்றும் யஹியாகான் தெரிவித்தார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஹரீஸ் எம்பிக்கு பணம் வழங்கியதனை அம்பலப்படுத்தும் யஹியாகான்! | Tamil Leader | We Lead the Nation