Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

தேர்தல்களை இரு வருடங்களுக்கு ஒத்திவைக்க ஐ.தே.க ஆலோசனை!

T

The Leader Desk

மே 28, 2024 • 11:43 AM

தேர்தல்களை இரு வருடங்களுக்கு ஒத்திவைக்க ஐ.தே.க ஆலோசனை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பதவிக்காலம் மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியினால் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
  • அதற்கான அறிவும் திறமையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இருப்பதை நாம் அறிவோம்.
  • ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

பதவிக்காலம் மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியினால் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார   ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

“தற்போது, ​​நாட்டின் கடனை மறுசீரமைத்து சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து சலுகைகளைப் பெற்று சர்வதேச முதலீடுகள் மற்றும் உறவுகளை மேம்படுத்தும் பயணத்தை நாம் காண முடிகிறது.

சர்வதேச ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்கான அறிவும் திறமையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இருப்பதை நாம் அறிவோம்.

எனவே தேர்தலை இன்னும் இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைத்து பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது அத்தியாவசியமான விடயமாக மாறியுள்ளது.

சர்வஜன வாக்கெடுப்புக்குச் சென்று உறுதிப்படுத்திய பிறகே அதைச் செய்ய வேண்டும். இது மிகவும் நடைமுறை ஜனநாயக முறைப்படி செய்யப்பட வேண்டும்."

தேர்தல்  மழுங்கடிக்கப்படுகிறது என்று கூறாமல் மற்றைய அரசியல் கட்சிகளும் இதை அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

தேர்தலை நடத்துவது சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் தேவையற்ற பண விரயத்தை ஏற்படுத்துவதோடு, நாட்டை  காலியான  நிலையில் இருந்து மீட்பதற்கான எதிர்கால நடவடிக்கைகளுக்கு அதிக ஆதரவைப் பெறும் திறனையும் இழக்க நேரிடும் என்று பொதுச் செயலாளர் கூறுகிறார்.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பக் கூடிய கூட்டணியை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்,

இதேவேளை, மக்களும் நாட்டின் அரசியல் தலைவர்களும் செய்ய வேண்டியது எதிர்காலத்தில் இந்த நாட்டை ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒப்படைப்பதே ஆகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...