Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

தென்கிழக்கு பல்கலை ஊழியர் சங்கப் போராட்டத்துக்கு சில தரப்பினர் ஆதரவு வழங்கவில்லை என குற்றச்சாட்டு!

T

The Leader Desk

மே 27, 2024 • 9:02 AM

 தென்கிழக்கு பல்கலை  ஊழியர் சங்கப்  போராட்டத்துக்கு சில தரப்பினர் ஆதரவு வழங்கவில்லை என குற்றச்சாட்டு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆனால் தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள மாணவர் அமைப்புக்கள் உள்ளிட்ட அமைப்புக்கள் இதுவரை பத்திரிகையாளர் சந்திப்புக்களையோ அல்லது ஆதரவான கருத்துக்களையோ வெளியிடாதது கவலையளிப்பதாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்க செயலாளர் எம்.எம்.
  • தாஜுடீன் தலைமையில் இன்று (27) தபல்கலைக்கழக முன்றலில் இடம்பெற்ற போராட்டத்தின்போது செயலாளர் எம்.எம்.
  • இங்கு கருத்து தெரிவித்த ஊழியர் சங்கத்தின் தலைவர் தாஜுடீன், 26 நாட்களுக்கு மேலாக பல்கலைக்கழகங்கள் ஸ்தம்பித்துள்ள நிலையில் இதுவரை அரசாங்கம் எவ்வித தீர்வையும் வழங்க முன்வரவில்லை.
  • எங்களது போராட்டம் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட நியாயமான கோரிக்கைக்கான போராட்டம்.
எழுத்து அளவு:

முன்வைத்து போராடி வரும் நிலையில் நாட்டில் உள்ள ஏனைய பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர் சங்கங்கள் உள்ளிட்ட ஏனைய சங்கங்களும் பல்கலைக்கழகத்துக்கு வெளியே உள்ள பல்வேறு சங்கங்களும் அமைப்புக்களும் பத்திரிகை மாநடுகளைகளை ஏற்பாடு செய்து எங்களது நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்க முன்வந்துள்ளன.

ஆனால் தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள மாணவர் அமைப்புக்கள் உள்ளிட்ட அமைப்புக்கள் இதுவரை பத்திரிகையாளர் சந்திப்புக்களையோ அல்லது ஆதரவான கருத்துக்களையோ வெளியிடாதது கவலையளிப்பதாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்க செயலாளர் எம்.எம். முகமது காமில் தெரிவித்தார்.

yyhfjmkjl

தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.ரி.எம். தாஜுடீன் தலைமையில் இன்று (27) தபல்கலைக்கழக முன்றலில் இடம்பெற்ற போராட்டத்தின்போது செயலாளர் எம்.எம். முகமது காமில் மேற்படி கருத்துக்களை முன்வைத்தார்.

இங்கு கருத்து தெரிவித்த ஊழியர் சங்கத்தின் தலைவர் தாஜுடீன், 26 நாட்களுக்கு மேலாக பல்கலைக்கழகங்கள் ஸ்தம்பித்துள்ள நிலையில் இதுவரை அரசாங்கம் எவ்வித தீர்வையும் வழங்க முன்வரவில்லை.

இவ்வாறான நிலை நீடிக்குமாக இருந்தால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் இது தொடர்பில் அரசாங்கமோ அல்லது மாணவர்களோ பெற்றோர்களோ தங்களது கருத்துக்களை முன் வைக்காமல் இருப்பது ஆச்சரியமாக இருப்பதாக தெரிவித்தார்.

நாங்கள் சொகுசு தேவைகளுக்காக போராடவில்லை. எங்களது போராட்டம் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட நியாயமான கோரிக்கைக்கான போராட்டம். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலவரங்களின் காரணமாக எங்கள் ஊழியர்கள் தங்கள் வாழ்வை கொண்டு செல்ல மிகுந்த சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.


yym
26 நாட்களாக நாங்கள் போராடி வரும் இவ்வாறான சூழலில் சில பல்கலைக்கழகங்களில் உள்ள மனிதாபிமானமற்ற சிலர் எங்களது நியாயமான கோரிக்கைகளை மலினப்படுத்தும் வகையில் சூசகமாக சில வேலைத்திட்டங்களை செய்ய முனைகின்றனர். இவ்வாறான செயற்பாடுகள் எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுகின்றன.

இங்கு கருத்து தெரிவித்த ஊழியர் சங்கத்தின் செயலாளர் எம்.எம். முகமது காமில் பல்கலைக்கழக கட்டமைப்பில் பணியாற்றுபவர்கள் என்ற ரீதியில் கல்விசாரா ஊழியர் களாகிய நாங்கள் ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஏற்படும் அநீதிகளுக்கு குரல் கொடுத்துள்ளோம் இவ்வாறான நிலையில் சிலர் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை நாங்கள் கூட்டாக கண்டிக்கின்றோம். இவர்கள் எங்கள் கஷ்டங்களை உணர்ந்து எங்களுக்காக குரல் கொடுக்க முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இன்றைய போராட்டத்தின்போது வாக்களிக்கப்பட்ட 107 சத வீத சம்பள அதிகரிப்பை வழங்கு, உறுதியளித்த 25 சத வீத MCA கொடுப்பனவை வழங்கு என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளுக்கு அரசாங்கம் தீர்வை தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

yyy

இங்கு; ஒற்றுமையே பலம், சமத்துவமே எம் தேவை, அரசாங்கமே கண்முளித்துப்பார், 8 வருட ஏமாற்றம் இன்னும் தொடருமா?, வேண்டாம் வேண்டாம் பாகுபாடு வேண்டாம், புத்திஜீவிகளை உருவாக்கும் அரசு ஊழியர் களாகிய நாங்கள் நடுத்தெருவில் என்பன போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...