Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

தேர்தலுக்கு முன்னர் இன, மத அவநம்பிக்கை தீர்க்கப்பட வேண்டும்! - கரு ஜயசூரிய

T

The Leader Desk

மே 25, 2024 • 3:24 PM

தேர்தலுக்கு முன்னர் இன, மத அவநம்பிக்கை தீர்க்கப்பட வேண்டும்! - கரு ஜயசூரிய

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வரலாற்றைப் பார்க்கையில், 1948இல் பிரித்தானியப் பேரரசில் இருந்து எமது நாடு சுதந்திரம் அடைந்தமைக்கு சிங்களம், தமிழ், முஸ்லிம் மற்றும் பறங்கியர் உட்பட அனைத்து இனத்தலைவர்களின் கூட்டு முயற்சியே காரணமாக இருந்தது.
  • தற்போதைய நிலைமையில் நாட்டின் அனைத்து நிலைமைகளும் எதிர்கால சந்ததியினர் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்.
  • அவர்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியே நாட்டின் சுதந்திரம் என்பதை நினைவுகூருகின்றோம்.
எழுத்து அளவு:

இன மற்றும் மத அவநம்பிக்கையை தீர்ப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற தலைப்பில் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய விடுத்துள்ள ஊடக அறிக்கையை முழுமையாக  இங்கு தருகிறோம்

சமூக நீதிக்கான தேசிய இயக்கம் அதன் ஆரம்பத்திலிருந்து மறைந்த மாதுலுவாவே சோபித்த தேரரின் செயற்பாடுகளான தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்காக ஈடுபட்டு வருகிறது. 
 
எவ்வாறாயினும், அந்தப் பயணத்தில் ஒரு தேசமாக, இலக்குகளை அடையவதற்கு நாம் இதுவரை தவறிவிட்டோம் என்பதை அங்கீகரிக்கிறோம், 
 
அதுவே தற்போது நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு காரணமாகியுள்ளது.
 
வரலாற்றைப் பார்க்கையில், 1948இல் பிரித்தானியப் பேரரசில் இருந்து எமது நாடு சுதந்திரம் அடைந்தமைக்கு சிங்களம், தமிழ், முஸ்லிம் மற்றும் பறங்கியர் உட்பட அனைத்து இனத்தலைவர்களின் கூட்டு முயற்சியே காரணமாக இருந்தது. அவர்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியே நாட்டின் சுதந்திரம் என்பதை நினைவுகூருகின்றோம். துரதிர்ஷ்டவசமாக, பிளவுபடுத்தும் இன மற்றும் மத போக்குகள் உட்பட அடுத்தடுத்த நிகழ்ந்தேறிய விடயங்கள் இந்த ஒற்றுமையை சிதைத்து விட்டன.
 
தற்போதைய நிலைமையில் நாட்டின் அனைத்து நிலைமைகளும் எதிர்கால சந்ததியினர் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். எனவே, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தவும் சர்ச்சைக்குரிய காணிப் பிரச்சினையை உத்தேச காணி ஆணைக்குழுவின் ஊடாக தாமதமின்றி தீர்க்கவும் அக்கறையுடன் பரிசீலிக்குமாறு அரசாங்கத்திடமும் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் நாம் பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கிறோம். 
 
மேலும், பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பாக குறிப்பாக வடக்கில் உள்ள அனைத்து பங்குதாரர்களுடனும் வெளிப்படையான மற்றும் நேர்மையான கலந்துரையாடல்களை தாமதமின்றி முன்னெடுக்குமாறும் நாங்கள் பரிந்துரைக்கிறோம்.
 
சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் தேசத்தின் நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பது மற்றும் தீர்வு காண்பதற்கு ஆக்கபூர்வமான உரையாடல்களில் ஈடுபடுவது மிகவும் முக்கியமானதாகும்.
 
உலகத்தமிழர் பேரவையின் ஊடாக மதத் தலைவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடையே மேம்படுத்தப்பட்ட உறவுகளையும் நேர்மறையான முன்னேற்றங்களை நாங்கள் ஏற்றுக்கொண்டு பாராட்டுகிறோம்.
 
தேசிய ரீதியாக கூட்டா நாம் அர்ப்பணிப்புடனும் ஒத்துழைப்புக்களுடனும் முன்னெடுக்கும் செயற்பாடுகள் பிரகாசமான எதிர்காலத்திற்கான நம்பிக்கையை அளிக்கின்றன.
அடுத்த தேர்தலை நாம் நெருங்கும் போது, அனைத்து பங்குதாரர்களும் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு உணர்வோடு ஒன்று சேருமாறு கேட்டுக்கொள்கிறோம். 
 
இந்த ஒன்றிணைவானது முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் அதன் மூலம், எதிர்கால சந்ததியினருக்கு வளமான இலங்கையை  பரிசை வழங்க முடியும் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
  
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

தேர்தலுக்கு முன்னர் இன, மத அவநம்பிக்கை தீர்க்கப்பட வேண்டும்! - கரு ஜயசூரிய | Tamil Leader | We Lead the Nation