Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

குருணாகல் சிங்கள மக்களில் பலர் தற்போதும் என்னிடம் மன்னிப்புக் கோருகின்றனர்! வைத்தியர் ஷாபி!

T

The Leader Desk

மே 22, 2024 • 2:17 PM

குருணாகல்  சிங்கள மக்களில் பலர் தற்போதும் என்னிடம்   மன்னிப்புக் கோருகின்றனர்! வைத்தியர் ஷாபி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தன்னிடம் மன்னிப்புக் கோருவதாக குருணாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷிஹாப்தீன் மொஹமட் ஷாபி கூறுகிறார்.
  • 'சட்டம், விஞ்ஞானம் மற்றும் வெகுஜன ஊடகங்களை புறநிலை நோக்கங்களுக்காக தவறாகப் பயன்படுத்துதல்' எனும் தொனிப்பொருளில் மே 21ஆம் திகதி கொழும்பில் 'உரிமைகளுக்கான ஊடகவியலாளர்கள்' ஏற்பாடு செய்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே கலாநிதி ஷாபி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
  • எனக்கு எதிராக முறைப்பாடு செய்தவர்கள் எனவும் தங்களை மன்னிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர் என தெரிவித்துள்ள அவர் சிசேரியன் சத்திரசிகிச்சையின் போதுஅவர்கள் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தனர் என குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

தன்னிடம் மன்னிப்புக் கோருவதாக குருணாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷிஹாப்தீன் மொஹமட் ஷாபி கூறுகிறார்.

எதிர்கால சந்ததியினர் இலங்கையில் மகிழ்ச்சியாக வாழ சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் இந்த பௌத்த நாடு என்றாவது ஒரு நாள் ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணமாக அமைய வேண்டும் எனவும் தாம் நம்புவதால் நாட்டை விட்டு வெளியேறத் தயாரில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

'சட்டம், விஞ்ஞானம் மற்றும் வெகுஜன ஊடகங்களை புறநிலை நோக்கங்களுக்காக தவறாகப் பயன்படுத்துதல்' எனும் தொனிப்பொருளில் மே 21ஆம் திகதி கொழும்பில் 'உரிமைகளுக்கான ஊடகவியலாளர்கள்' ஏற்பாடு செய்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே கலாநிதி ஷாபி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எனக்கு எதிராக முறைப்பாடு செய்தவர்கள் எனவும் தங்களை மன்னிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர் என தெரிவித்துள்ள அவர் சிசேரியன் சத்திரசிகிச்சையின் போதுஅவர்கள் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தனர் என குறிப்பிட்டுள்ளார்.

தன்னை போதைப்பொருள்குற்றவாளி மாகந்துரே மதுசுடன் சிறையில் ஒன்றாக தடுத்துவைத்திருந்தனர் என வைத்தியர் ஷாபி சிகாப்தீன் தெரிவித்துள்ளார்.
 
நான் அவருடன் ஒன்றாக உணவை பகிர்ந்துகொண்டேன், அவருக்கு அருகில் உறங்கினேன் என தெரிவித்துள்ள வைத்தியர் வெள்ளை உடையணிந்த அரசியல்வாதிகளிடம் காணமுடியாத மனிதாபிமானத்தை அவரிடம் கண்டேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
 
எனது மருத்துவ தொழில்துறையை சார்ந்தவர்களே என்னை கைவிட்டனர் அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் அனுரத்த பாதெனிய அவர்களில் ஒருவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
 
எந்த தொழில்துறையிலும் தங்களின் நன்மைக்காக செயற்படும் நபர்கள் இருப்பார்கள் நேர்மையாக பேசுவதென்றால் இந்த பாதெனிய என்ற நபர் அந்தநேரத்தில் இலங்கை அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின்தலைவராக பணியாற்றியவர் இந்த விடயத்தில் இன்றுவரை மௌனமாக உள்ளார் எனவும் வைத்தியர் ஷாபி சிகாப்தீன் தெரிவித்துள்ளார்.
 
எனினும் வைத்தியர் பாதெனியவின் மனைவி இரண்டாவது தடவை கருத்தரித்த போது நானே பிரசவம் பார்த்தேன் எனவும் அவர் 
 

குருணாகல் போதனா வைத்தியசாலையில் சிங்கள தாய்மார்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, கட்டாய விடுப்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டொக்டர் ஷாபி, பின்னர் அந்தக் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் குருணாகல் வைத்தியசாலையில் பணிக்கு திரும்பினார்..


தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

குருணாகல் சிங்கள மக்களில் பலர் தற்போதும் என்னிடம் மன்னிப்புக் கோருகின்றனர்! வைத்தியர் ஷாபி! | Tamil Leader | We Lead the Nation