Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் தமிழர் விரோதப் போக்கு!

T

The Leader Desk

மே 22, 2024 • 4:31 AM

ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் தமிழர் விரோதப் போக்கு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆயிரக்கணக்கான உறவுகளின் நினைவாக கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வின்போது ஏறாவூர் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட வன்முறை மற்றும் இடையூறுகளுக்கு பிரதேசத்தின் சிவில் ஆர்வலர்கள் மற்றும் மதத்தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
  • மே 18ஆம் திகதி இடமபெற்ற கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வில் நீதிமன்ற உத்தரவை சமர்ப்பிக்காமல் ஏறாவூ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி என் ஹர்ஷ டி சில்வா நடந்து கொண்ட முறைகளை தமிழ் ஊடகவியலாளர்கள் காணொளியாக பதிவு செய்துள்ளனர்.
  • மாறாக தமிழ் மக்களின் உரிமைகளுக்கே இடையூறாக அமையும் என சமூக ஆர்வலர் விமலசேன லவகுமார் சுட்டிக்காட்டியுள்ளார்.
எழுத்து அளவு:

ஆயிரக்கணக்கான  உறவுகளின் நினைவாக கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வின்போது ஏறாவூர் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட வன்முறை மற்றும் இடையூறுகளுக்கு பிரதேசத்தின் சிவில் ஆர்வலர்கள் மற்றும் மதத்தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மே 18ஆம் திகதி இடமபெற்ற கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வில் நீதிமன்ற உத்தரவை சமர்ப்பிக்காமல் ஏறாவூ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி என் ஹர்ஷ டி சில்வா நடந்து கொண்ட முறைகளை தமிழ் ஊடகவியலாளர்கள் காணொளியாக பதிவு செய்துள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர்களின் நினைவுத்தூபி பொலிஸாரால் தாக்கப்பட்டதைக் கண்டித்து 20ஆம் திகதி கிழக்கு ஊடகவியலாளர் சங்கத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண சிவில் சமூக ஆர்வலர் விமலசேன லவகுமார், பொலிஸார் அத்துமீறிச் செயற்படுவதாகக் குற்றம் சுமத்தினார் .

“பொதுவாக ஒரு கஞ்சியைக் கூட பகிர்ந்து கொள்ள அனுமதிக்க முடியாத வகையில் அரசு செயல்படுகிறது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில். சட்டம் ஒழுங்கை மீறி பொலிஸார் செயற்படுகின்றனர். சட்டத்தை அவமதிக்கும் இந்த செயலை பொலிஸார் செய்து வருகின்றனர். சட்டத்தை தங்களுக்கு ஏற்றவாறும் தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்டும் இப்படி நடந்து கொள்கிறார்கள்”.

உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு இடமளிக்காமல் பொலிஸார் முட்டுக்கட்டை போடுவது பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையூறாக அமையாது. மாறாக தமிழ் மக்களின் உரிமைகளுக்கே இடையூறாக அமையும் என சமூக ஆர்வலர் விமலசேன லவகுமார் சுட்டிக்காட்டியுள்ளார்.

"இது மாணவர்களுக்கு ஒரு பிரச்சினையாக இல்லை. இதுதான் தமிழ் மக்களுக்கு நடந்தது. இதை ஒரு சிவில் சமூகமாக நாங்கள் கண்டிக்கிறோம். இனிவரும் காலங்களில் இவ்வாறானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும்.

சர்வதேச சமூகமும் இதில் கவனம் செலுத்த வேண்டும். அரசும், பொலிஸாரும் தங்களுக்கு ஏற்றவாறு சட்டத்தை மாற்றுவதை தடுக்க மனித உரிமைகள் ஆணையம் செயறபட வேண்டும்.

இறந்தவர்களுக்கு மரியாதை கொடுப்பது இந்து கலாசாரத்தின் ஓர் அங்கமாக இருப்பது போல், இறந்தவர்களுக்கு மரியாதை செய்வதும் ஐக்கிய நாடுகள் சபையின் அடிப்படை உரிமையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவை வன்முறை மூலம் சீர்குலைத்த ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என் ஹர்ஷ டி சில்வாவிடம் ஊடகவியலாளர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் பலமுறை கேட்டபோதும், நினைவு தின நிகழ்வை நிறுத்துவதற்கான நீதிமன்ற உத்தரவை அவர் முன்வைக்கவில்லை.

பல்கலைக்கழக மாணவர்களினால் பூக்களும் விளக்குகளும் வைத்து அஞ்சலி செலுத்தும் மேசை, கஞ்சி சமைப்பதற்கு பயன்படுத்திய பானைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன என்றார்.

Eravur 1

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் தமிழர் விரோதப் போக்கு! | Tamil Leader | We Lead the Nation