Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

நான் எந்தக் கட்சியுடன் இணைவேன்? விளக்குகிறார் றிஸ்லி முஸ்தபா!

T

The Leader Desk

மே 19, 2024 • 12:43 PM

நான் எந்தக் கட்சியுடன் இணைவேன்? விளக்குகிறார் றிஸ்லி முஸ்தபா!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஏதாவது ஒரு கட்சியில் இணைந்து பயணிக்க தயாராகவுள்ளேன் என சமூக சேவகரும் முன்னாள் பிரதி அமைச்சர் மர்ஹும் மையோன் முஸ்தபாவின் புதல்வருமான றிஸ்லி முஸ்தபா தெரிவித்தார்.
  • ஆனால், மேற்சொன்ன விடயங்களுடன. பொருத்தமான ஒரு கட்சியுடன் மிக விரைவில் இணைந்து நான் பயணிக்க தயாராகவுள்ளேன்.
  • சமகால அரசியல் களம் தொடர்பில் சிலோன் ஜர்னலிஸ்ட் ஃபோரம் உடனான ஊடகவியலாளர் மாநாட்டின் போது கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார்.
எழுத்து அளவு:

ஏதாவது ஒரு கட்சியில் இணைந்து பயணிக்க தயாராகவுள்ளேன் என சமூக சேவகரும் முன்னாள் பிரதி அமைச்சர் மர்ஹும் மையோன் முஸ்தபாவின் புதல்வருமான  றிஸ்லி முஸ்தபா தெரிவித்தார்.

சமகால அரசியல் களம் தொடர்பில் சிலோன் ஜர்னலிஸ்ட் ஃபோரம் உடனான ஊடகவியலாளர் மாநாட்டின் போது கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து வெளியிடும்போது,

மொட்டுக் கட்சியிலிருந்து  கடந்தமுறை பாராளுமன்ற தேர்தல் வேட்பாளராக போட்டியிட்ட நான்  கணிசமான  வாக்குகளை பெற்றேன்.  ஆனால் தற்போது நடுநிலையாகவே பயணித்து வருகிறேன்.

ஏனெனில் எமது மக்களின் அவா நிறைவேற்றப்பட வேண்டும். மக்களின் தேவைகள், பிரதேச அபிவிருத்தி, மக்களின் ஒற்றுமை போன்ற விடயங்களில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

அதற்கு ஏற்றாற்போல் எந்தக் கட்சி மக்கள் நலன் சார்ந்து செயற்படுகிறதோ அந்தக் கட்சியில் இணைந்து பயணிக்கத் தயாராக உள்ளேன். 

பல கட்சிகளுடன்  பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. தேசிய ரீதியான கட்சிகள் மற்றும் சிறுபான்மை கட்சிகளுடன் பேச்சுவார்த்தை இடம்பெறுகிறது.  ஆனால் இதுவரையில் எந்தக் கட்சியிலும் நான் இணையவில்லை.

ஆனால், மேற்சொன்ன விடயங்களுடன.  பொருத்தமான ஒரு கட்சியுடன் மிக விரைவில் இணைந்து நான் பயணிக்க தயாராகவுள்ளேன்.

கடந்த தேர்தலில் எனக்கு கணிசமான வாக்குகள் கிடைத்தன. இருப்பினும் தோல்வி கண்டாலும்  நான் உண்மையில் கவலைப்படவில்லை.

ஆனால் வாக்களித்த  மக்களின்  அமானிதத்தை  பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில்    நான் "றிஸ்லி முஸ்தபா எடியுகேசன் எயிட் " அமைப்பொன்றை நிறுவியுள்ளேன்

அதனூடாக சேவை செய்து வருகிறேன். அதுபோன்று மேலும் பல சேவைகளை செய்வதற்காக அரசியல் கட்சிகள் கட்சி ஒன்றில் இணைந்து எமது பயணத்தை தொடரலாம் என நினைக்கின்றேன்.

அபிவிருத்திகள் என்று வருகின்றபோது நாம் மொட்டு கட்சியில் இருந்தபோது அதனூடாக மிகவும் சிரமப்பட்டு பல தடைகளை தாண்டி பல்வேறு வேலைகளை செய்தோம். 

வீதி அபிவிருத்தி, மைதான அபிவிருத்தி என்றும் இன்னும் பல பல்வேறு வேலை திட்டங்களை நாம் கொண்டு வந்து பல்வேறு தடைகளை தாண்டி சிலவற்றை முடித்தும். வைத்துள்ளோம்

ஆனால் சில பணிகள் அவ்வாறே நாட்டின் தற்போதைய நிலைமை இடை நடுவில் விடப்பட்டாலும் அதற்கான வேலைகள் தொடர்ந்தும் நடைபெறும்  என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்றும் கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...