Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

களுபோவில பொலிஸ் நிலையத்தில் நடந்தது என்ன?

T

The Leader Desk

மே 19, 2024 • 4:59 AM

களுபோவில பொலிஸ் நிலையத்தில் நடந்தது என்ன?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குறித்த முன்னாள் கான்ஸ்டபிள் தற்போது கட்டுமான நிர்மாண ஒப்பந்ததாரரின் கீழ் பணிபுரிகிறார்.
  • இவர் கடந்த 14 ஆம் திகதி இரவு வேலை முடிந்து பலருடன் இரவு உணவு உட்கொள்வதற்காகன கொஹுவலவில் உள்ள ஒரு உணவகத்துக்குச் சென்றுள்ளார்.
  • இதன்போது முன்னாள் பொலிஸ் சார்ஜன்ட் முன்னர் தான் இலங்கை பொலிஸில் கடமையாற்றிய காலத்தில் பெறப்பட்ட பொலிஸ் சின்னம் கொண்ட ரீ சேர்ட்டை அணிந்திருந்தார் . அப்போது அந்த உணவகத்தில் பொலிஸ் சீருடையில் 2 காணப்பட்ட இரண்டு பொலிஸார் உட்பட 6 பேர் அங்கு உணவருந்திக் கொண்டிருந்துள்ளனர்.
  • இதனையடுத்து களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் ,நேற்று (18) காலை வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எழுத்து அளவு:

ஒருவர் பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளானதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.   ​இலங்கை பொலிஸின் சின்னம் கொண்ட ரீ சேர்ட் அணிந்திருந்த ஒருவர் பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளானதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.   ​

17 வருடங்கள் பொலிஸ் சேவையில் கடமையாற்றிய நிலையில் இடைநிறுத்தப்பட்ட  முன்னாள் பொலிஸ் சார்ஜன்ட் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .

குறித்த முன்னாள் கான்ஸ்டபிள் தற்போது கட்டுமான நிர்மாண ஒப்பந்ததாரரின் கீழ் பணிபுரிகிறார்.

இவர் கடந்த 14 ஆம் திகதி  இரவு வேலை முடிந்து பலருடன் இரவு உணவு  உட்கொள்வதற்காகன  கொஹுவலவில்  உள்ள ஒரு உணவகத்துக்குச் சென்றுள்ளார்.

இதன்போது முன்னாள் பொலிஸ் சார்ஜன்ட் முன்னர் தான் இலங்கை பொலிஸில் கடமையாற்றிய காலத்தில் பெறப்பட்ட பொலிஸ் சின்னம் கொண்ட   ரீ சேர்ட்டை அணிந்திருந்தார் . 

அப்போது அந்த உணவகத்தில் பொலிஸ்  சீருடையில் 2 காணப்பட்ட இரண்டு பொலிஸார் உட்பட 6  பேர் அங்கு உணவருந்திக் கொண்டிருந்துள்ளனர்.

பின்னர் , முன்னாள்  பொலிஸ்  சார்ஜண்டிடம், அவர் அணிந்திருந்த பொலிஸ் இலட்சனை கொண்ட ரீ சேர்ட் தொடர்பில் அவர்கள்  விசாரித்துள்ளனர். 

அதற்கு அவர்  தாம் 17 வருடங்களாக பொலிஸ் சேவையில் கடமையாற்றியதாக  தெரிவித்திருந்தார் . 

பின்னர் அந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தப்பட்ட பொலிஸ் சார்ஜன்டை  கொஹுவல   பொலிஸ் நிலையத்தின் பின்புறத்துக்கு  அழைத்துச் சென்று கடுமையாக தாக்கி பொலிஸ் கூண்டில் அடைத்தனர் . 

பின்னர் விடுவிக்கப்பட்ட அவரை ஒப்பந்ததாரர் நிறுவனத்தின் பணியாளர்களால் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதனையடுத்து களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் ,நேற்று (18) காலை வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...