இன ஐக்கியத்துக்காக, சமாதானத்துக்காக கல்முனை மக்களின் அபிவிருத்திக்காக நான் துண்டாடுவதற்கு தயாராக உள்ளேன். இதற்கு தமிழ் தலைவர்கள் தயாரா? என பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கேள்வி எழுப்பினார்.
கல்முனை மாநகர கேட்போர் கூடத்தில் இன்று (18) இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், நான் இந்த நகரத்தின் மக்கள் தலைவன் சொல்லுகிறேன், கல்முனையை நாங்கள் பிரிப்போம். இதற்கு தைரியம் உள்ள தமிழ் தலைவர்கள் முன்வரட்டும்.
கொழும்பில் வெள்ளவத்தை மற்றும் தமிழ் பிரதேசங்களை வைத்து தமிழர்களுக்கு பிரித்து வழங்குமாறு ஆக குறைந்தது ஒரு முகநூல் பதிவை ஏனும் இவர்களால் இடமுடியுமா?
கல்முனையில் உள்ள விசேட அம்சம் என்னவென்றால் நான்கு சமூகங்கள் வாழ்வதே. இவர்கள் ஒற்றுமையாக வாழவேண்டும். எனவேதான் தமிழ் இளைஞர்கள், புத்திஜீவிகள் நாங்கள் இணைந்து இந்த மக்களுக்காக ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டும் என்றார்.
கல்முனை நகரத்தின் மக்கள் தலைவன் நான்! - ஹரீஸ் எம்பி
T
The Leader Desk
மே 18, 2024 • 11:56 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- இன ஐக்கியத்துக்காக, சமாதானத்துக்காக கல்முனை மக்களின் அபிவிருத்திக்காக நான் துண்டாடுவதற்கு தயாராக உள்ளேன்.
- கல்முனை மாநகர கேட்போர் கூடத்தில் இன்று (18) இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
- இதற்கு தைரியம் உள்ள தமிழ் தலைவர்கள் முன்வரட்டும்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

