Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

'கோபமடைந்த நான் போட்டரைக் கூப்பிட்டு காதில் அறைந்தேன்' - இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர

T

The Leader Desk

மே 17, 2024 • 4:50 AM

'கோபமடைந்த நான் போட்டரைக் கூப்பிட்டு காதில் அறைந்தேன்' - இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொண்டு செல்லும் போர்ட்டர் ஒருவரைத் தாக்கியதாக இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
  • கடந்த 14ஆம் திகதி காலை இராஜாங்க அமைச்சர் தனது மனைவி மற்றும் அமைச்சரின் மெய்ப்பாதுகாவலர்களுடன் தனது மனைவியை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்றதாக கூறப்படுகிறது.
  • தனக்கு தரவேண்டிய ஆயிரம் ரூபாவுக்கு பதிலாக 700 ரூபாயை வழங்குவதற்கு போர்ட்டர் எதிர்ப்புத் தெரிவித்ததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
எழுத்து அளவு:

கொண்டு செல்லும் போர்ட்டர் ஒருவரைத்  தாக்கியதாக இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த 14ஆம் திகதி காலை இராஜாங்க அமைச்சர் தனது மனைவி மற்றும் அமைச்சரின் மெய்ப்பாதுகாவலர்களுடன் தனது மனைவியை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதற்காக  கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்றதாக கூறப்படுகிறது.

விமான நிலையத்தின் பிரதான வாயிலிலிருந்து துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களுடன் இராஜாங்க அமைச்சர் உள்ளே நுழைய முற்பட்டபோது துப்பாக்கியுடன் நுழைய அனுமதிக்க முடியாது என விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள்  இராஜாங்க  அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.

இதன்போது விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகளை இராஜாங்க அமைச்சர் திட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து பிரசன்ன ரணவீர தனது மனைவியின் பொருட்களை எடுத்துச் சென்ற போர்ட்டர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

தனக்கு தரவேண்டிய ஆயிரம் ரூபாவுக்கு பதிலாக 700 ரூபாயை வழங்குவதற்கு போர்ட்டர் எதிர்ப்புத் தெரிவித்ததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

விமான நிலையத்தில் சேவை வழங்கும் போர்ட்டருக்கு ஆயிரம் ரூபா வழங்க வேண்டும் என விளம்பர பலகையில் காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே  போர்ட்டரை காதில் அறைந்து விட்டு இராஜாங்க விமான நிலைய வளாகத்தை விட்டு வெளியேறினார்.

இந்த சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர கூறும்போது, ​​''அப்போது நான் கோபமடைந்தேன். நான் அவரைக் கூப்பிட்டு காதில் அறைந்தேன்."

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...