Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

இலங்கையில் இணையதளங்கள் மூலம் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பு என்கிறது அமெரிக்க நிறுவனம்!

T

The Leader Desk

மே 17, 2024 • 2:21 AM

இலங்கையில் இணையதளங்கள் மூலம் சிறுவர் துஷ்பிரயோகங்கள்  அதிகரிப்பு என்கிறது அமெரிக்க நிறுவனம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அதிகரித்துள்ளமை தொடர்பில் அமெரிக்க அமைப்பு ஒன்று இலங்கைக்குக்கு அறிவித்துள்ளது.
  • எவ்வாறாயினும், இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம், இணையத்தில் நிர்வாண புகைப்படங்களைப் பயன்படுத்தி சிறுவர்களை அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல் தொடர்பாக 55 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்துள்ளன.
  • , 22 மற்றும் 23 ஆம் ஆண்டுகளில் துஷ்பிரயோகத்துக்காக சிறுவர்களை இணையதளங்களில் கோருவது 300 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அமெரிக்க ஏஜென்சியான காணாமல் போன மற்றும் சுரண்டப்பட்ட குழந்தைகளுக்கான தேசிய மையம் வெளிப்படுத்துகிறது.
  • இலங்கை சிறுவர் மற்றும் இளம்பருவ மனநல சங்கத்தின் தலைவர் பேராசிரியர் மியுரு சந்திரதாச தெரிவிக்கையில் "பிள்ளைகள் 16 வயதை அடையும் வரை தங்கள் சொந்த ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவது பொருத்தமானதல்ல என்பதை பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டும் என்றார்.
எழுத்து அளவு:

அதிகரித்துள்ளமை தொடர்பில் அமெரிக்க அமைப்பு ஒன்று இலங்கைக்குக்கு அறிவித்துள்ளது.

அதன் அறிக்கையின் அடிப்படையில் நீதிமன்றத்துக்குச் சென்று பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் இது தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்துகிறது எனவும் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம், இணையத்தில் நிர்வாண புகைப்படங்களைப் பயன்படுத்தி சிறுவர்களை அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல் தொடர்பாக 55 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்துள்ளன.

பெற்றோரின் பராமரிப்பில் வளரும் பிள்ளைகள் சமூகத்தில் வெளிப்படும்போது படிப்படியாக கைத்தொலைபேசி மற்றும் இணைய நடவடிக்கைகளுக்கு திரும்புகின்றனர்.

இணையதளத்தில் அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகங்களால் இது ஒரு பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது.

இணையம் மற்றும் சமூக ஊடக வலையமைப்புகளில் நிர்வாண புகைப்படங்களைப் பயன்படுத்தி சிறுவர்களை அச்சுறுத்துவது மற்றும் செல்வாக்கு செலுத்துவது தொடர்பில் 2023 ஆம் ஆண்டில் 150 முறைப்பாடுகளும் இந்த வருடம் ஏப்ரல் 31 ஆம் திகதி வரை 55 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

2021, 22 மற்றும் 23 ஆம் ஆண்டுகளில் துஷ்பிரயோகத்துக்காக சிறுவர்களை இணையதளங்களில் கோருவது 300 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அமெரிக்க ஏஜென்சியான காணாமல் போன மற்றும் சுரண்டப்பட்ட குழந்தைகளுக்கான தேசிய மையம் வெளிப்படுத்துகிறது.

இலங்கையில் வயது குறைந்த சிறுவர்களின் ஆபாச புகைப்படங்களை உருவாக்கி இணையத்தில் வெளியிட சில குழுக்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அந்த அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை காணாமல் போன மற்றும் சுரண்டப்பட்ட சிறுவர்களுக்கான தேசிய மையத்தின் கூற்றுப்படி, சிறுவர்களை கவர்ந்திழுக்க மிகவும் பொதுவான முறைகள் பாலியல் உரையாடல்களில் ஈடுபடுவது, குழந்தைகளின் பாலியல் புகைப்படங்களை கோருவது அல்லது பகிர்வது, அநாகரீகமான புகைப்படங்களை விநியோகித்தல் மற்றும் பரிசுகள், மருந்துகள், போக்குவரத்து, உணவு போன்றவை என தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்கள் மூலம் காட்டப்படும் சில நடத்தைகள் மயக்கப்படும் அபாயத்தை அதிகரிக்கின்றன என்றும் அதனால் பாலியல் துஷ்பிரயோகத்ததுக்கு ஆளாக நேரிடும் என்றும் கூறுகிறது.

அப்படியானால், சமூக வலைப்பின்னல்கள் மற்றும் இணையத்தில் உங்கள் பிள்ளைகள் இத்தகைய துஷ்பிரயோகங்களில் இருந்து எவ்வாறு தடுக்க முடியும்?

இலங்கை சிறுவர் மற்றும் இளம்பருவ மனநல சங்கத்தின் தலைவர் பேராசிரியர் மியுரு சந்திரதாச தெரிவிக்கையில்

"பிள்ளைகள் 16 வயதை அடையும் வரை தங்கள் சொந்த ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவது பொருத்தமானதல்ல என்பதை பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டும் என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...