Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

பாடசாலைகளை ஆக்கிரமித்துள்ள போதைவஸ்து பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!-சஜித் பிரேமதாச

T

The Leader Desk

மே 16, 2024 • 6:43 AM

பாடசாலைகளை ஆக்கிரமித்துள்ள போதைவஸ்து பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!-சஜித் பிரேமதாச

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வழங்கி பல்வேறு அரசாங்கங்கள் ஆட்சிக்கு வந்தாலும், ஆட்சிக்கு வந்த உடனேயே மதுபான அனுமதிப் பத்திரங்களை கொடுத்துள்ளனர்.
  • வாக்குரிமை இல்லாத 41 இலட்சம் பாடசாலை மாணவர்களின் முன்னேற்றத்திற்காகவே இந்த விடயத்தை இங்கு அடையாளப்படுத்திக் காட்டுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
  • பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 188 ஆவது கட்டமாக 1,177,000 ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் அனுராதபுரம், கலாவெவ, தம்புத்தேகம சோலம மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு மே 15 ஆம் திகதி இடம்பெற்றது.
  • இதன்போது, பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.
எழுத்து அளவு:

வழங்கி பல்வேறு அரசாங்கங்கள் ஆட்சிக்கு வந்தாலும், ஆட்சிக்கு வந்த உடனேயே மதுபான அனுமதிப் பத்திரங்களை கொடுத்துள்ளனர். இதன் காரணமாக, பாடசாலை மட்டத்தில் மது ஒழிப்பு வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்கு எதிராக தாய், தந்தையர் ஒன்றிணைய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தேர்தலை இலக்காகக் கொண்டு அரசியல்வாதிகளுக்கு மதுபான அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்ட வருகிறது. ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் இந்த மதுபான அனுமதிப் பத்திரங்கள் இரத்துச் செய்யப்படும்.

இதுகுறித்து தினமும் பாராளுமன்றத்தில் பேசப்பட்டு வருகிறது. பாடசாலை மட்டத்தில் மது, போதைப்பொருள் மற்றும் புகைத்தல் பாடசாலைகளை ஆக்கிரமித்துள்ளது. இதனை முறியடிப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். மது, போதைப்பொருள், சிகரெட் போன்றவற்றை ஊக்குவிப்பதற்கு இடமளிக்கக் கூடாது. இதற்கான வாயில்களை மூட வேண்டும். வாக்குரிமை இல்லாத 41 இலட்சம் பாடசாலை மாணவர்களின் முன்னேற்றத்திற்காகவே இந்த விடயத்தை இங்கு அடையாளப்படுத்திக் காட்டுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 188 ஆவது கட்டமாக 1,177,000 ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் அனுராதபுரம், கலாவெவ, தம்புத்தேகம சோலம மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு மே 15 ஆம் திகதி இடம்பெற்றது.

இதன்போது, பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.

நமது நாட்டின் மொத்த கடன் சுமை 100 பில்லியன் டொலர்கள் ஆகும். 2-3 ஆண்டு காலகட்டத்துக்கு கடனை செலுத்த வேண்டிய தேவை இல்லை என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. 2-3 ஆண்டுகளில், இருதரப்பு, பலதரப்பு, வெளிநாட்டு பிணைமுறி பத்திரதாரர்கள் மற்றும் உள்நாட்டு கடன் வழங்குநர்களுக்கு திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். இந்நிலையில் இருந்து மீள்வதற்கு பொருளாதாரம் வேகமாக வளர்ச்சியடைய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இதற்கு ஒவ்வொரு துறையும் வலுவாக முன்னேற வேண்டும். அன்னிய நேரடி முதலீட்டை வலுப்படுத்த வேண்டும். இதற்கு திருட்டு ஒழிய வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் அனைத்து அரச கொடுக்கல் வாங்கல்களும் வெளிப்படைத்தன்மையுடன் கையாளப்படும். 220 இலட்சம் மக்களை ஏமாற்றி, கொள்முதல் முறைக்கு புறம்பாக திருடும் நிலையே தற்போது நாட்டில் காணப்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அரச நிதிக்கு மேலதிகமாக நன்கொடையாளர்களின் உதவிகளையும் பெற்று நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...