Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இராஜாங்க அமைச்சரின் பேயாட்டம்!

T

The Leader Desk

மே 16, 2024 • 3:56 AM

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இராஜாங்க அமைச்சரின் பேயாட்டம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தனது மனைவி உட்படலானோரை கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்வதற்காக இராஜாங்க அமைச்சர் தனது மெய்ப்பாதுகாவலர்களுடன் சென்று டிக்கெட் வாங்காமல் பிரதான வாயில் ஊடாக விமான நிலையத்துக்குள் பிரவேசித்ததாக விமான நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் தெரிவித்தனர்.
  • அரசியல்வாதியுடன் வந்தவர்களின் பயணப்பொதிகளை விமான நிலையத்துக்குள் எடுத்துச் செல்வதற்காக குறைந்த கட்டணத்தை வழங்கியதற்காக அரசியல்வாதியிடம் உரிய கட்டணத்தை செலுத்துமாறு அங்கிருந்த ஊழியர்கள் கேட்டுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  • இந்நிலையில் அவரது பாதுகாவலர்கள் துப்பாக்கி ஏந்தியிருந்ததால் அவர்களை உள்நுழைய அனுமதிக்க முடியாது என விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் குறித்த அரசியல்வாதியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
எழுத்து அளவு:

  சென்ற  அரசியல்வாதி ஒருவர் பயணிகளின் பயணப் பொதிகளை அங்குமிங்கும் நகர்த்திக் கொண்டிருந்த ஊழியர் ஒருவரின் காதில் அறைந்து மிரட்டியதாக விமான நிலைய வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது. 

வெளிநாட்டு பயணமொன்றுக்காக அரசியல்வாதியின் மனைவி உட்பட பலர் நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்துள்ளனர்.

தனது மனைவி உட்படலானோரை  கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு  அழைத்துச் செல்வதற்காக இராஜாங்க அமைச்சர் தனது மெய்ப்பாதுகாவலர்களுடன் சென்று டிக்கெட் வாங்காமல் பிரதான வாயில் ஊடாக விமான நிலையத்துக்குள் பிரவேசித்ததாக விமான நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் தெரிவித்தனர்.

இந்நிலையில் அவரது பாதுகாவலர்கள் துப்பாக்கி ஏந்தியிருந்ததால் அவர்களை உள்நுழைய அனுமதிக்க முடியாது என விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள்  குறித்த  அரசியல்வாதியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அரசியல்வாதியுடன்  வந்தவர்களின் பயணப்பொதிகளை விமான நிலையத்துக்குள் எடுத்துச் செல்வதற்காக குறைந்த கட்டணத்தை வழங்கியதற்காக அரசியல்வாதியிடம் உரிய கட்டணத்தை செலுத்துமாறு  அங்கிருந்த ஊழியர்கள்  கேட்டுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் ஆத்திரமடைந்த அந்த அரசியல்வாதி, தனது காலணியால் ஒரு ஊழியரின்  காலை மிதித்து, காதில் குத்திவிட்டு, பாதுகாவலர்களுடன் வெளியேறியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...