Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

எம்பிக்களுக்கு இலஞ்சமாக வழங்கப்படும் மதுபான அனுமதிப்பத்திரம்! -எதிர்க்கட்சித் தலைவர்

T

The Leader Desk

மே 14, 2024 • 10:46 AM

எம்பிக்களுக்கு இலஞ்சமாக வழங்கப்படும் மதுபான அனுமதிப்பத்திரம்! -எதிர்க்கட்சித் தலைவர்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உறுப்பினர்களுக்கு இலஞ்சமாக இது வழங்கப்பட்டு வருகிறது.
  • மதுபான உரிமம் வைத்திருக்கும் நபர்கள், நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரிகளின் வகைகள் மற்றும் அந்த வரிகளை அறவிடும் நிறுவனங்கள், அந்த மதுபான நிறுவனங்கள் 2023 ஆம் ஆண்டுக்கான வரியை சரியாகச் செலுத்தியுள்ளனவா?
  • இது 2022 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் அதிகரிப்பா அல்லது குறைவா?
  • நிலையியற் கட்டளைகள் 27(2) இன் கீழ் பாராளுமன்றத்தில் இன்று(14) கேள்வி எழுப்பும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எழுத்து அளவு:

உறுப்பினர்களுக்கு இலஞ்சமாக இது வழங்கப்பட்டு வருகிறது. இடைத்தரகர்கள் பணம் சம்பாதிக்கும் விதமாக மதுபான உரிமப்பத்திரங்கள் வழங்கப்படுகின்றன. கடந்த காலங்களில் முறையான திட்டமிடல் இல்லாமல் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டதால் கலவரங்களும்  இடையூறுகளும் ஏற்பட்டன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மத வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் மதுபான கடைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படுகின்றன. இது அரசியல் சூதாட்டமாகும். இது குறித்து அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
2022 ஜூலை முதல் தற்போது வரை மது விற்பனைக்கான உரிமப் பத்திரங்களைப் பெற கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளின் எண்ணிக்கை மற்றும் அது தொடர்பான தகவல்களையும், இந்நிறுவனங்களின் பனிப்பாளர்கள் தொடர்பான தகவல்கள் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.

இந்தக் கோரிக்கைகளின் பிரகாரம் உரிமப் பத்திரம் வழங்கப்பட்டவர்களது விபரங்கள் குறித்தும், இவற்றை வழங்குவதில் பயன்படுத்தப்படும் அளவுகோல்கள் மற்றும் நிராகரிக்கப்பட்டவை எவை என்பது குறித்தும், மதுபான அனுமதிப் பத்திர அரசியல் சூதாட்டத்தில் யார் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கேள்வி எழுப்பினார்.

மதுபான உரிமம் வைத்திருக்கும் நபர்கள், நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரிகளின் வகைகள் மற்றும் அந்த வரிகளை அறவிடும் நிறுவனங்கள், அந்த மதுபான நிறுவனங்கள் 2023 ஆம் ஆண்டுக்கான வரியை சரியாகச் செலுத்தியுள்ளனவா? இது 2022 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் அதிகரிப்பா அல்லது குறைவா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இந்த மதுபான நிறுவனங்கள் வரி செலுத்தாதிருந்தால், செலுத்த வேண்டியுள்ள வரி நிலுவைத் தொகை? இதில் யார் ஈடுபட்டுள்ளனர்? என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.

நிலையியற் கட்டளைகள் 27(2) இன் கீழ் பாராளுமன்றத்தில் இன்று(14) கேள்வி எழுப்பும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...