Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்டு வர வேண்டாம்: ரணிலுக்கு சுமந்திரன் கூறும் செய்தி!

T

The Leader Desk

மே 14, 2024 • 6:33 AM

தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்டு வர வேண்டாம்: ரணிலுக்கு சுமந்திரன்  கூறும் செய்தி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்டு வர வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கூறிவைக்க விரும்புவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.
  • வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று (13) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
  • ஆகவே, இதனைத் தடுக்கின்றவர்கள் மிக மோசமான செயல்களிலே ஈடுபடுகின்றார்கள்.
எழுத்து அளவு:

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்டு வர வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கூறிவைக்க விரும்புவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று (13) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சும் நினைவேந்தல் நிகழ்வைப் பொலிஸார் நீதிமன்றக் கட்டளை ஊடாகத் தடுத்துள்ளனர் என்று அறிய முடிகிறது. நினைவேந்தல்கள் உலக நியமங்களிலே மிக முக்கியமானவை.

ஆகவே, இதனைத் தடுக்கின்றவர்கள் மிக மோசமான செயல்களிலே ஈடுபடுகின்றார்கள். ஜனாதிபதி ரணிலுக்கு ஒரு செய்தியைச் சொல்லுகின்றோம். அதாவது உங்களது கட்டளையின் பெயரிலே அல்லது உங்கள் அமைச்சர்களின் கட்டளையின் பெயரிலே நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுக்கின்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுமாக இருந்தால் வரப் போகும் ஜனாதிபதித் தேர்தலில் எமது மக்களிடம் வாக்குகளைக் கேட்டு வரவேண்டாம்.

இதேபோன்று இதனை மற்றைய தலைவர்களிடத்திலேயும் நாங்கள் கூற விரும்புகின்றோம். எமது மக்கள் தமக்கு நிகழ்ந்தவற்றை அனுஷ்டிப்பதை அங்கீகரிக்கவில்லை என்றால் இங்கே எமது மக்களின் வாக்குகளைக் கேட்டு வரவேண்டாம் என்பதையும் நாங்கள் சொல்லி வைக்க விரும்புகின்றோம் என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...