Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

வலுக்கும் கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்!

T

The Leader Desk

மே 12, 2024 • 1:23 PM

வலுக்கும் கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அத்துமீறல்களுக்கும் எதிராகவும் நிருவாக உரிமையை மீட்பதற்காகவும் மக்கள் முன்னெடுக்கும் போராட்டத்தின் 50 ஆவது நாளுக்காக பிரதேச செயலக முன்றலில் இன்று (12) ஞாயிற்றுக்கிழமை 49 ஆவது நாளாக ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
  • பிரதேச செயலகத்தின் முன்பாக கடந்த மார்ச் மாதம் திங்கட்கிழமை 25 ஆம் திகதி பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாதைகளை தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்று கூடி போராட்டத்தை முன்னெடுத்தனர்.
  • அதன் தொடர்ச்சியாக 50 ஆவது நாளான இன்று பல்வேறு சுலோகங்களை முன்வைத்து சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் குறித்த பிரதேச செயலக முன்றலில் ஒன்று கூடி கல்முனை நகரை நோக்கி பேரணியுடன் கவனயீர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து பின்னர் நிறைவு செய்தனர்.
  • இதன் போது அரசியல்வாதிகள் உயர் அரச அதிகாரிகளின் உருவ பொம்மைகளும் பேரணியில் எடுத்து செல்லப்பட்டு இறுதியாக திருஷ்டி கழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

அத்துமீறல்களுக்கும் எதிராகவும் நிருவாக உரிமையை மீட்பதற்காகவும் மக்கள் முன்னெடுக்கும் போராட்டத்தின் 50 ஆவது நாளுக்காக பிரதேச செயலக முன்றலில் இன்று (12) ஞாயிற்றுக்கிழமை 49 ஆவது நாளாக ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

பிரதேச செயலகத்தின் முன்பாக கடந்த மார்ச் மாதம் திங்கட்கிழமை 25 ஆம் திகதி பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாதைகளை தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்று கூடி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

Kalmunai

அதன் தொடர்ச்சியாக 50 ஆவது நாளான இன்று பல்வேறு சுலோகங்களை முன்வைத்து சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் குறித்த பிரதேச செயலக முன்றலில் ஒன்று கூடி கல்முனை நகரை நோக்கி பேரணியுடன் கவனயீர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து பின்னர் நிறைவு செய்தனர். இதன் போது அரசியல்வாதிகள் உயர் அரச அதிகாரிகளின் உருவ பொம்மைகளும் பேரணியில் எடுத்து செல்லப்பட்டு இறுதியாக திருஷ்டி கழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாக செயல்பட்டு வந்த மேற்குறித்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து 1993 ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் சுட்டிக்காட்டுகின்றனர்.

இருந்தபோதிலும் ஒருசில அரசியல்வாதிகள் தொடக்கம் உயர் அதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொது மக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்து உள்ளதாக குறிப்பிடுகின்றனர்.

Kalmunai2

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம் பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிருவாக அடக்குமுறைகளையும் கண்டித்தும்

திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது எனவும் அரசாங்கம் இனியும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் என மேலும் மக்கள் தெரிவித்தனர்.

Kalmunai3
அத்துடன் குறித்த பிரதேச செயலக விடயம் தொடர்பில் இறுதியாக கடந்த 2019 ஆண்டு கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதற்காக உண்ணாவிரத போராட்டம் பல அரசியல்வாதிகள் பிரமுகர்களின் போலி வாக்குறுதிகளால் போராட்டத்தை கைவிடும் நிலை ஏற்பட்டிருந்தது.

Kalmunai4
மேற்குறித்த உண்ணாவிரதப் போராட்டமானது அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பிரதேச செயலகத்தின் முன்னால் உண்ணாவிரத போராட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது.இதில் கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர்இகிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றிய தலைவர் ஸ்ரீ ஸ்ரீ க.கு.சச்சிதானந்தம் சிவம் குருஇகல்முனை மாநகரசபை உறுப்பினர்களான சா.சந்திரசேகரம் ராஜன் மற்றும் அழகக்கோன் விஜயரத்னம் ஐக்கிய வணிகர் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணப்பிள்ளை லிங்கேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டு களமிருங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

வலுக்கும் கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்! | Tamil Leader | We Lead the Nation