Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

முஜிபுர் ரஹ்மான் தகுதியற்றவர்: தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு!

T

The Leader Desk

மே 11, 2024 • 6:07 AM

முஜிபுர் ரஹ்மான்  தகுதியற்றவர்: தேர்தல் ஆணைக்குழு  தெரிவிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மேயர் வேட்பாளராக இருந்த முஜிபுர் ரஹ்மான் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டதன் காரணமாக உள்ளூராட்சித் தேர்தலில் அக்கட்சியின் மேயர் வேட்பாளர் பதவி தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
  • இதற்கமைய தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தலையும் வெளியிட்டது.
  • ஐக்கிய மக்கள் சக்தியின் எம்பி முஜிபுர் ரஹ்மான், உள்ளூராட்சித் தேர்தலில் கொழும்பில் கட்சியின் மேயர் வேட்பாளராக போட்டியிடுவதற்காக 2023 ஜனவரியில் தனது பதவியை இராஜினாமா செய்தார்.
எழுத்து அளவு:

மேயர் வேட்பாளராக இருந்த முஜிபுர் ரஹ்மான் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டதன் காரணமாக உள்ளூராட்சித் தேர்தலில் அக்கட்சியின் மேயர் வேட்பாளர் பதவி தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவின் பதவி நீக்கம் காரணமாக வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் பொருத்தமானவர் என அக்கட்சி தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்திருந்தது.

இதற்கமைய தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தலையும் வெளியிட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் எம்பி முஜிபுர் ரஹ்மான், உள்ளூராட்சித் தேர்தலில் கொழும்பில் கட்சியின் மேயர் வேட்பாளராக போட்டியிடுவதற்காக 2023 ஜனவரியில் தனது பதவியை இராஜினாமா செய்தார்.

இதேவேளை, முஜிபுர் ரஹ்மான் உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பாளராக இருந்த போதிலும், அவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றதன் காரணமாக உள்ளூராட்சித் தேர்தலில் வேட்பாளராக அவர் தகுதியற்றவர் எனவும் வேறு யாருடைய பெயரையும் அதில் சேர்க்க முடியாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

முஜிபுர் ரஹ்மான் தகுதியற்றவர்: தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு! | Tamil Leader | We Lead the Nation